‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்
Updated on
1 min read

சென்னை: ‘ஆ​யுஷ்’ படிப்​பு​களுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க நாளை மறு​நாள் கடைசி நாள் ஆகும். சித்​தா, ஆயுர்​வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்​எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஎச்​எம்​எஸ்) பட்​டப்​படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்​ணப்​பம் கடந்த 13-ம் தேதி www.tnayushselection.org என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் தொடங்​கியது.

நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறும் இந்த 4 படிப்​பு​களுக்​கும் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீடு வழங்​கப்​படு​கிறது. இது​வரை 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஆன்​லைன் விண்​ணப்​பம் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணி​யுடன் நிறைவடைகிறது.

அதே​போல், இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​துவ பட்​டப்​படிப்​புக்கு (பிஎன்​ஒய்​எஸ்) 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு www.tnayushselection.org என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.

இதற்கு பிளஸ் 2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறும். இந்த படிப்​புக்கு இது​வரை 2,500 பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இதற்​கும் 31-ம் தேதி மாலை 5 மணி​யுடன் விண்​ணப்​பம் நிறைவடைகிறது. இந்த படிப்​புக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள்​ இடஒதுக்​கீடு கிடை​யாது.

‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்
அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி - அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in