அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி - அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்

அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி - அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: வெள்ள பாதிப்​பு​களைத் தடுக்​க​வும், நீர்​நிலைகளைச் சீரமைக்​க​வும் சென்னை அடை​யாறு ஆறு மற்​றும் தெற்கு பக்​கிங்​ஹாம் கால்வாய் ஆகிய​வற்​றைத் தூர்​வாரி சீரமைக்​கும் பணி​களை அமைச்​சர் என்​.ஆனந்த் தொடங்கி வைத்​தார்.

சென்​னை​யின் முக்​கிய ஆற்​றுப் படு​கை​யான அடை​யாறு ஆறு, செம்​பரம்​பாக்​கம் ஏரி உபரி நீர் மற்​றும் மழைநீரை கடலுக்​குக் கொண்டு செல்​லும் முக்​கிய வழித் தடமாகும். தற்​போது, இந்த ஆற்​றின் சில பகு​தி​களில் ஆகா​யத் தாமரைகள் மற்​றும் மிதவைப் பொருட்​கள் தேங்கி நீரோட்​டம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனைச் சீரமைக்​கும் வகை​யில், நேற்று காலை மணப்​பாக்​கம் அடை​யாறு ஆற்​றுப் பகு​தி​யில் தூர்​வாரும் பணி​களை ஊரக வளர்ச்சி மற்​றும் நீர்​வளத்​துறை அமைச்​சர் என்​.ஆனந்த் தொடங்கி வைத்​தார்.

நீர்​வளத் துறை மற்​றும் தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​கள் இணைந்து மேற்​கொள்​ளும் இப்​பணி​யால், விமான நிலைய ஓடு​பாதை முதல் திருவிக பாலம் வரை நீரோட்​டம் சீராகும்.

இதன்மூலம், மணப்​பாக்​கம், நந்​தம்​பாக்​கம், கோடம்​பாக்​கம், ஜாபர்​கான்​பேட்​டை, சைதாப்​பேட்​டை, கோட்​டூர்​புரம் மற்​றும் மயி​லாப்​பூர் ஆகிய பகு​தி​களில் வெள்ள அபா​யம் நீங்​கி, மழைநீர் தடை​யின்றி செல்ல வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இதனைத் தொடர்ந்​து, சோழிங்​கநல்​லூர் பகு​தி​யில் உள்ள தெற்கு பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் சீரமைப்​புப் பணி​களை அமைச்​சர் ஆய்வு செய்து தொடங்கி வைத்​தார்.

பழைய மாமல்​லபுரம் சாலை மற்​றும் கிழக்கு கடற்​கரை சாலை இணைப்பு மேம்​பாலம் அருகே அமைந்​துள்ள இக்​கால்​வா​யில், பள்​ளிக்​கரணை மற்​றும் ஒக்​கியமடுவு பகு​தி​களில் இருந்து அடித்து வரப்​படும் ஆகா​யத் தாமரைகள் பெரு​மள​வில் தேங்​கி​யுள்​ளன.

இதனால் ஏற்​படும் துர்​நாற்​றம் மற்​றும் கொசுத் தொல்​லை​யால் பொது​மக்​கள் பாதிப்​புக்​குள்​ளாகி வந்​தனர். பெருநிறு​வனப் பங்​களிப்பு மற்​றும் தன்​னார்​வலர்​களின் உதவி​யுடன் இந்​தப் பணி​கள் தற்​போது மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி - அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்
மேற்கூரை சூரிய மின் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த செயலி: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in