அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறையின் செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின்​ கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 277 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்றில் 2026-27-ம் ஆண்டு கலந்​தாய்​வுக்​கான கால அவகாசம் ஆக.14-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

இந்​நிலை​யில். மாணவர்​களின் நலன் கருதி தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் நேரடி சேர்க்​கைக்​கான கால அவகாசம் ஆக31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். அரசுப் பள்​ளி​களில் பயின்​றவர்​களுக்கு தமிழ்ப் புதல்​வன் மற்​றும் புது​மைப்​பெண் திட்​டங்​களின்​கீழ் ரூ.1000 கூடு​தலாக வழங்​கப்​படும். அரசு வழங்​கும் இலவச மிதிவண்​டி, சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் உள்​ளிட்ட அனைத்​தும் வழங்​கப்​படும். குறிப்​பிட்ட அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் விடுதி வசதி​யும் உள்​ளது. மேலும், விவரங்​களுக்கு 9499055642, வாட்​ஸ்​-அப் எண்- 9499055612 ஆகிய​வற்றை தொடர்​பு​கொள்​ளலாம்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
புதிய எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in