புதிய எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க அரசு திட்டம்

புதிய எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க அரசு திட்டம்
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைக்கு முதல்​முறை​யாகத் தேர்​வாகும் எம்​எல்​ஏக்​களுக்கு கார் மற்றும் தனி உதவி​யாளர்​ வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

சட்​டப்​பேரவை பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் விசிக எம்​எல்ஏ ஜோதி​மணி கடந்த 12-ம் தேதி பேசி​ய​போது, ‘‘எம்​எல்​ஏக்​கள் மக்​கள் பணி செய்ய வாக​னம் (கார்), தனி உதவி​யாளர் போன்ற வசதி​களை அரசு செய்​துதர வேண்​டும்’’ என்று கோரிக்கை வைத்​தார்.

அதற்கு பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் பதில் அளித்து பேசும்​போது, ‘‘எம்​எல்​ஏக்​கள், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் தரப்​பில் பல்​வேறு கோரிக்​கைகள் வந்​துள்​ளன. அவற்றை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​கிறேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்​பார்’’ என்று தெரி​வித்​தார்.

பின்​னர், எம்​எல்ஏ ஜோதி​மணி​யின் கோரிக்கை மனுவை முதல்​வர் விஜய்​யின் கவனத்​துக்கு பேர​வைத் தலை​வர் பிர​பாகர் அனுப்​பி​னார். அதன் அடிப்​படை​யில், லஞ்​சம், ஊழலற்ற நிர்​வாகத்தை உறு​தி​செய்ய சட்​டப்​பேர​வைக்கு முதல்​முறை​யாகத் தேர்​வாகும் எம்​எல்​ஏக்​களுக்கு கார் மற்​றும் உதவி​யாளர்​ வழங்க முதல்​வர் விஜய் ஒப்​புதல் அளித்​துள்​ள​தாக​வும், நடப்பு கூட்​டத்​தொடரிலேயே இதற்​கான அறி​விப்பு வெளி​யாகும் என்​றும் தகவல்​கள்​ வெளி​யாகி​யுள்​ளன.

புதிய எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க அரசு திட்டம்
ஊழலற்ற தமிழகம் உருவாவதே முழு சுதந்திரம்: சுதந்திர தின உரையில் முதல்வர் விஜய் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in