“நீட் தேர்வுக்கு தினமும் 17 மணி நேரம் படித்தேன்” - முதலிடம் பிடித்த ஆரியன் குப்தா தகவல்

“நீட் தேர்வுக்கு தினமும் 17 மணி நேரம் படித்தேன்” - முதலிடம் பிடித்த ஆரியன் குப்தா தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த ஜுன் 21-ம் தேதி மீண்​டும் நடத்​தப்​பட்​ட நீட் தேர்வு முடிவு​கள் நேற்று முன்​தினம் இரவு வெளி​யா​யின. இத்​தேர்வில் மொத்​தம் 11.21 லட்​சம் பேர் தேர்ச்சி பெற்​றுள்ள நிலையில், இதில் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் பெற்று பஞ்​சாப்​பைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்​றும் ஹரி​யா​னாவைச் சேர்ந்த பன்​ஷுல் பன்​சால் ஆகியோர் முதலிடம் பிடித்​துள்​ளனர்.

அதே நேரத்​தில், 19 பேர் 700 மதிப்​பெண்​களை​யும், 138 பேர் 690 மதிப்​பெண்​களை​யும் பெற்​றுள்​ளனர். குறிப்​பாக, 690 மதிப்​பெண்களுக்கு மேல் எடுத்த 138 தேர்​வர்​களில் 93 சதவீதத்​திற்​கும் அதி​க​மானோர் முதன்​முறை​யாக நீட்​-​யுஜி தேர்வை எழு​தி​ய​வர்கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தனது வெற்றி குறித்து ஆரியன் குப்தா அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: நீட் தேர்​வுக்​காக நான் கடுமை​யாக உழைத்​தேன். எனது அர்ப்​பணிப்​பும், ஒரு நாளைக்கு 16 முதல் 17 மணி நேரம் வரை படித்​ததே இந்த வெற்​றிக்​குக் காரணம். எனக்கு தூக்​கமே வராது. ஆனால் இப்​போது இது ஒரு கனவு போல வியப்​பாக இருக்கிறது. தேர்​வுக்​குத் தயா​ராகும் மாணவர்​கள் தங்​களது ஆசிரியர்​கள் கூறு​வதை அப்​படியே பின்​பற்ற வேண்​டும்.

என்​னுடைய பெற்​றோர்​கள் மருத்​து​வர்​களாக உள்​ளனர். நான் எதிர்​காலத்​தில் புற்​று நோய் சிகிச்சை நிபுண​ராக விரும்பு​கிறேன். நான் 3-ம் வகுப்பு படிக்​கும்​போது எனது பாட்டி புற்​று நோ​யால் இறந்​தார். அப்​போதே நான் புற்​று​நோய் சிகிச்சை நிபுண​ராகி பிறருக்கு சிகிச்சை அளிக்க வேண்​டும் என சபதம் எடுத்​தேன். இவ்​வாறு ஆர்​யன்​ குப்​தா கூறி​னார்​.

“நீட் தேர்வுக்கு தினமும் 17 மணி நேரம் படித்தேன்” - முதலிடம் பிடித்த ஆரியன் குப்தா தகவல்
ஹைட்ரஜன் ரயிலை தொடங்கினார் மோடி: 75 நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in