‘சிப் டிசைனிங்’ வேலை கிடைத்தது எப்படி? - வினோதா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

வினோதா

வினோதா

Updated on
2 min read

என் பெயர் வினோதா. என் சொந்த ஊர் கடலூர். என் அப்பா ஒரு டைலர், நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், நான் BE படித்திருக்கிறேன், Edveon Technologies என்ற நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக எனக்கு வேலை கிடைத்துள்ளது.

நான் முதல்வன் திட்டம், எங்கள் கல்லூரியில் கட்டாய திறன் பயிற்சியாக கொண்டுவந்ததின் விளைவாக, நான் முதல்வன் பாட திட்டத்தின் பாடத்திட்டங்களை படித்தோம், அதில் எனக்கு பிடித்த IC Chip Design and Verification பாடத்தை படித்தேன், ஒவ்வொரு semester ளையும் நிறைய பயனுள்ள திறன் பயிற்சிகளை கொடுத்தார்கள், இந்த பாடங்களை வெளியே சென்று படித்தால் 3 லட்சங்கள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கட்டணமில்லாமல் நான் படித்தேன்.

நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழா Hackathon அனைத்திலும் பங்குப்பெற்றேன், நிரல் திருவிழா Hackathon மூலமாக Edveon Technologies-ல் Internship-ம் கிடைத்தது, Internship முடிந்து, அதே நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தால் Chip Designing and Verification Engineer ஆக வேலையும் கிடைத்தது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நல்ல வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் பொற்றோர்களும் சரி நானும் சரி எனக்கு பிடித்த வேலை இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, ஏன் என்றால் புதியவர்களுக்கு (fresher) இந்த வேலை அவ்வளவு சுலபாக கிடைக்காது, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகத்தான் இந்த வேலை எனக்கு கிடைத்துள்ளது, நான் முதல்வன் திட்டத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வருக்கும் நன்றி.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

வெற்றி நிச்சயம் திட்டம்:

என் பெயர் சரண்யா, நான் மதுரை, திருப்பரங்குன்றதை சேர்த்தவள், என் கல்யாணதிற்கு முன்பு என் அப்பா, தம்பி என்று அவர்களை நம்பி இருந்தேன், கல்யாணத்திற்கு பிறகு எல்லாவற்றிற்கும் கணவரை எதிர்பார்த்து இருந்தேன், வெளியே எங்கும் தனியாக செல்லமாட்டேன், அவ்வளவு தைரியம் கிடையாது, வாழ்க்கையில் யாரையாவது எதிர்பார்த்து வளர்த்தவள் நான், நான்கு சுவர்களுக்கு உள்ளேயே என் வாழ்க்கை இருந்தது.

<div class="paragraphs"><p>சரண்யா</p></div>

சரண்யா

என் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் மூலமாக, வெற்றி நிச்சயம் திட்டம் பற்றி அறிந்து கொண்டேன், அங்கு உறைவிடப் பயிற்சி மையத்தில், கட்டணமில்லாமல் பயிற்சி, புத்தகங்கள், தங்கும் வசதி மற்றும் உணவு வசதி அனைத்தையும் வழங்கினர். அங்கு Broadband Technician Course படித்தேன், அதில் 98% மதிப்பெண் பெற்றேன்.

வெற்றி நிச்சயம் திட்டம் மூலமாக Info Net Broadband என்ற நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. இப்பொழுது நான் தைரியமாக சுதந்திரமாகவும் பல இடங்களுக்கு தனியாக செல்கிறேன், வெற்றி நிச்சயம் திட்டம் எனக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுத்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை மீது நின்று நான் ஜெய்த்துவிட்டேன் என்று சத்தமாக சொல்கிறேன். இந்த வாழ்க்கையை கொடுத்த வெற்றி நிச்சயம் திட்டத்திற்கும், தமிழ்நாடு முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/

<div class="paragraphs"><p>வினோதா</p></div>
ரயில்வே தேர்வில் வென்றது எப்படி? - ரம்யா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in