

ரம்யா
வணக்கம், என் பெயர் ரம்யா. என் அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள். என் அப்பா ஓட்டுநராக பணிபுரிகிறார். கடந்த முன்று வருடங்களுக்கு மேலாக இந்தியன் ரயில்வே துறை தேர்வுகளை எழுதியிருந்தேன். என்னால் ஆனால் எந்தத் தேர்விலும் இறுதி கட்டம் வரை சென்று தேர்ச்சி பெறமுடியாமல் இருந்தேன்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டி தேர்வுகள் பிரிவில் வங்கி SSC, RRB உறைவிடப் பயிற்சி மையம் பற்றி என் தோழிகள் மூலமாக எனக்கு தெரிய வந்தது. அங்கு 6 மாத கட்டணமில்லா பயிற்சி நடைபெறுகிறது என்று தெரிந்து அதில் சேர்ந்தேன், அங்கு கட்டணமில்லாமல் பயிற்சி, புத்தகங்கள், தங்கும் வசதி மற்றும் உணவு வசதி அனைத்தையும் வழங்கினர். WIFI, ஆய்வக வசதிகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
பயிற்சி நிறுவனங்களில் இருந்து வந்து எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள். குழுவாக சேர்ந்துபடித்ததில் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது, ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பகிர்ந்துகொண்டு படிக்க முடிந்தது, நான் தனியாக படிக்கும்பொழுது இவைகளை தெரிந்துகொள்ள தவறிவிட்டேன், நான் முதல்வன் பயிற்சியில் சந்தேகங்கள் எழுந்த பொழுது எனக்கு தெளிவாகவும் பொறுமையாகவும், விளக்கமாக சொல்லிக்கொடுத்தார்கள்.
நான் முதல்வன் திட்டத்தினால் இப்பொழுது, இந்தியன் ரயில்வே துறை தேர்வில் தேர்வு எழுதி Assistant Loco Pilot ஆக தேர்ச்சி பெற்றுள்ளேன். "நான் முதல்வன் திட்டத்தை" எங்களுக்கு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி.
மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/
வெற்றி நிச்சயம் திட்டம்:
வணக்கம் என் பெயர் பார்க்கவி, நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பட்டுக்கோட்டை பக்கத்துல பாவாஜன் கிராமத்தில் இருந்து வருகிறேன். நான் படித்து வளர்ந்தது எல்லாமே என் அம்மாச்சி வீட்டில் தான், எனக்கு அப்பா கிடையாது, நான் ரொம்ப படிக்க கஷ்டப்பட்டு வளர்ந்தவள்.
பார்க்கவி
தோழிகள் மூலமாக வெற்றி நிச்சயம் பற்றி அறிந்து, நான் சென்னைக்கு வந்தேன், சென்னைக்கு முதன்முதலில் வரும்போது யாரையும் எனக்கு தெரியாது, எப்படி இங்கு இருக்க போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் இங்கே வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று, வெற்றி நிச்சயம் மூலமாக "Trans Energy Private Limited" என்ற நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.
இப்பொழுது நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன், என்னோட அம்மாவையும் நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன், இப்பொழுது நான் தைரியமாகவும் , பாதுகாப்பாகவும் உணர்கிறேன். வெற்றி நிச்சயம் திட்டத்தால் தான் இந்த நல்ல நிலமைக்கு என்னால் வர முடித்தந்து.
எங்க அம்மாவிடம், நான் இருக்கிறேன் அம்மா உனக்கு என்று தைரியமாக சொல்ல முடிகிறது, எங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு இல்லை. ஆனால் சொந்தமாக வீடு கட்டி எங்க அம்மாவை அங்கு உட்கார வைப்பேன் என்ற தைரியம் உள்ளது. இந்த தைரியத்தை கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாவிற்கும், துணை முதலமைச்சருக்கும், மிக்க நன்றி.
மேலும் விவரங்களுக்கு: https://www.tnskill.tn.gov.in/