தமிழக அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது
தமிழக அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்
Updated on
1 min read

சென்னை: அரசு மாதிரிப் பள்​ளி​களில் வரும் கல்​வி​யாண்​டுக்​கான (2026-27) மாணவர் சேர்க்கை பிப்​ர​வரி மாதம் நடை​பெறவுள்ள நிலை​யில், அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் தரத்தை உயர்த்த, 2021-22-ம் கல்​வி​யாண்​டில் மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் தொடங்​கப்​பட்​டது. தற்​போது மாவட்​டத்​துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்​தம் 38 மாதிரிப் பள்​ளி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இங்கு பவ்​வேறு வித​மான கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் போட்​டித் தேர்​வு​களுக்​கான சிறப்​புப் பயிற்​சிகளை வழங்கி உயர்​கல்​வி​யில் மாணவர் சேர்க்கை ஊக்​குவிக்​கப்​படு​கிறது. அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்களில் தகு​தி​யான மாணவர்கள் தேர்வு செய்​யப்​பட்டு இந்த மாதிரிப் பள்​ளி​களில் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு மாதிரிப் பள்​ளிகளில் 2026-27-ம் கல்​வி​யாண்டுக்​கான மாணவர் சேர்க்கை 9, 10-ம் வகுப்பு​களுக்கு பிப்​ர​வரிமாத​மும், 11-ம் வகுப்​புக்கு மே மாத​மும் நடை​பெறும்.

எனவே, முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் தலைமை ஆசிரியர்​கள், மாவட்ட, வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் ஆகியோரை கொண்டு இதற்​கான முன்​னோட்ட கூட்​டத்தை நடத்த வேண்டும்.

பிப்​ர​வரி 2-ம் வாரத்​தில் மாதிரிப் பள்​ளி​களில் 9, 10-ம் வகுப்​பு​களுக்கு தேர்ந்​தெடுக்​கப்​படும் மாணவர் பட்​டியல் வெளி​யிடப்​படும். அதன்​பின் முதன்​மைக் கல்வி அலு​வலர் உடனே மாவட்ட ஆட்​சி​யர் ஒப்​புதலைப் பெற்று அவர் தலை​மை​யில் மாணவர்​களின் பெற்​றோர், தலைமை ஆசிரியர்​கள் ஆகியோ​ருக்கு கூட்​டங்​கள் நடத்த வேண்​டும்.

இந்​தப் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட ஒரு வாரத்​தில் மாணவர் சேர்க்​கையை உறு​திப்​படுத்த வேண்​டும். இந்த அறி​வுரைகளைப் பின்​பற்றி அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களில் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​களை மாவட்ட மா​திரிப் பள்​ளி​களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்
அடையாறு பகுதியில் தலையில் காயங்களுடன் சாக்கு மூட்டையில் வடமாநில இளைஞர் சடலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in