தரவரிசைப் பட்டியலில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்: பொறியியல் பொதுக் கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது

தரவரிசைப் பட்டியலில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்: பொறியியல் பொதுக் கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது
Updated on
2 min read

சென்னை: பொறி​யியல் படிப்​புக்​கான தரவரிசைப் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. கலந்​தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.30 வரை நடை​பெற உள்​ளது.

தமிழகத்​தில் 440-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் உள்​ளன. இக்​கல்​லூரி​களில் பிஇ, பிடெக் படிப்​பு​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு சுமார் 1.80 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இவை ஒற்​றைச்சாளர முறை​யில் பொதுக் கலந்​தாய்வு மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. நடப்பு கல்வி ஆண்​டில் பொறி​யியல் படிப்​பில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களில் சேர 2.36 லட்​சம் மாணவர்​கள் விண்​ணப்​பித்​தனர். அவர்​களுக்கு ரேண்​டம் எண் ஒதுக்​கப்​பட்​டு, அவர்​களது கல்​விச் சான்​றிதழ்​கள் ஆன்​லைனில் சரி​பார்க்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், சென்னை கிண்​டி​யில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்​குநர் அலு​வல​கத்​தில் பொறி​யியல் படிப்​புக்​கான தரவரிசைப் பட்​டியலை உயர்​கல்​வித் துறை அமைச்சர் பி.​விஸ்​வ​நாதன் நேற்று வெளி​யிட்​டார். 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்​பெண் பெற்ற 53 மாணவர்​களின் பட்​டியலை​யும் வெளி​யிட்​டார். பின்​னர் அவர் கூறிய​தாவது:

மாணவர்​கள் தங்​கள் தரவரிசையை www.tneaonline.org என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். தரவரிசைப் பட்​டியலில் 53 பேர் 200-க்கு 200 கட் ​ஆஃப் மதிப்​பெண் பெற்​றுள்​ளனர். தரு​மபுரி மாணவி எஸ்​.அக்​‌ஷி​தா, திருப்​பூர் மாணவர் ஏ.ரோஹித் பாலன், நாமக்​கல் மாணவர் ஏ.வெங்​கடகிருஷ்ணன் முதல் 3 இடங்​களைப் பிடித்​துள்​ளனர்.

தரவரிசை​யில், அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள்​ஒதுக்​கீட்​டுப் பிரி​வில் 46,604 பேர், விளை​யாட்டு வீரர்​கள் பிரி​வில் 3,210 பேர், முன்​னாள் ராணுவத்​தினரின் வாரிசுகள் பிரி​வில் 1,176 பேர், மாற்​றுத் திற​னாளி​கள் பிரி​வில் 500 பேர் இடம்​பெற்றுள்ளனர்.

தரவரிசை​யில் பெயர் விடு​பட்​டிருந்​தாலோ, வேறு ஏதேனும் குறைகள் இருந்​தாலோ மாணவர்​கள் ஜூலை 6-ம் தேதிக்​குள் தங்கள் இருப்​பிடத்​துக்கு அரு​கில் உள்ள தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (TFC) அணுகி தீர்வு பெறலாம். அதே​போல, 7.5 சதவீத உள்​ஒதுக்​கீடு கோராமல் விடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்​களும் (6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்​ளி​யில் படித்​தவர்​கள்) அங்கு சென்று பெயரை இணைத்​துக் கொள்​ளலாம்.

முதல்​கட்​ட​மாக 7.5 சதவீத உள்​ஒதுக்கீட்​டில் சிறப்பு பிரி​வினருக்கு (மாற்​றுத் திற​னாளி​கள், முன்​னாள் ராணுவத்​தினரி்ன் குழந்​தைகள், விளை​யாட்டு வீரர்​கள்) ஜூலை 13, 14-ம் தேதி​களி​லும், சிறப்பு பிரி​வினருக்​கான பொதுக் கலந்​தாய்வு ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரை​யும் இணை​ய​வழி​யில் நடை​பெறும். பொதுப் பிரி​வினருக்​கான கலந்​தாய்வு இணை​ய​வழி​யில் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.30-ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்​கள் நடை​பெற உள்​ளது. துணை கலந்​தாய்வு உள்​ளிட்ட அனைத்து நடை​முறை​களும் செப்​.10-ம் தேதிக்​குள் முடிக்​கப்​படும்.

பொறி​யியல் படிப்​பில் மொத்​தம் 2.66 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த ஆண்டு கூடு​தலாக 19,657 இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. அரசு நிர்​ண​யித்​ததை​விட தனி​யார் கல்​லூரி​களில் கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அதே​போல, கல்​லூரி​கள் கட்​டாய நன்​கொடை வாங்​கக்​கூ​டாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

தரவரிசைப் பட்டியலில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்: பொறியியல் பொதுக் கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது
தோழமை கட்சிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை: தவெக தலைமையில் புதிய கூட்டணி உதயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in