தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்​திர பாஸ் கட்​ட​ணம் ஏப்​ரல் முதல் 3-வது முறை​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகளில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. சுங்​கச்​சாவடிகளில் ஒவ்​வோர் ஆண்​டும், 5 சதவீதம் கட்​ட​ணத்தை உயர்த்​திக்​கொள்ள, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது.

ஆண்​டு​ தோறும் ஏப்​.1-ம் தேதி கட்​ட​ணம் மாற்​றப்​படு​கின்​றது. இந்​நிலை​யில் சுங்​கச்​சாவடிகளுக்கு அருகே 20 கி.மீ. சுற்​றள​வில் வசிப்​பவர்​களுக்​கான மாதாந்​திர சுங்​கச்​சாவடி பாஸுக்​கான கட்​ட​ணத்தை இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் 3-வது முறை​யாக உயர்த்​தி​யுள்​ளது. மொத்​தத்​தில் ஏப்​ரல் 1-ம் தேதி​முதல் மாதாந்​திர பாஸ் கட்​ட​ணம் ரூ.30 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு
பழனிசாமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் 30-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலர் அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in