பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: பொறி​யியல் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஜூன் 5-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழக துறைக் கல்​லூரி​கள், அரசு பொறி​யியல் கல்​லூரி​கள், அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள், தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் என தமிழகத்​தில் 440-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் உள்​ளன. இக்​கல்​லூரி​களில் சுமார் 1.70 லட்​சம் அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன. இவை பொதுக் கலந்​தாய்வு மூலம் ஒற்​றைச் சாளர முறை​யில் நிரப்​பப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், வரும் 2026-27-ம் கல்வி ஆண்​டில் அரசு ஒதுக்​கீட்டு பொறி​யியல் இடங்​களில் சேரு​வதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு கடந்த மே 3-ம் தேதி தொடங்கி நடந்து வரு​கிறது. நேற்று மாலை நில​வரப்​படி 2.87 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

விண்​ணப்ப அவகாசம் இன்​றுடன் (ஜூன் 2) முடிவ​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், மாணவர்​கள் நலன் கரு​தி, அவகாசம் ஜூன் 5-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​படு​வ​தாக தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் அறி​வித்​துள்​ளது. எனவே, பொறி​யியல் படிப்​பில் சேர விரும்​பும் மாணவர்​கள் https://www.tneaonline.org என்ற இணை​யதளம் வாயி​லாக 5-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். சான்​றிதழ்​களை 6-ம் தேதி வரை பதிவேற்​றம் செய்​ய​லாம்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியல், பழங்குடியினருக்கும் வருமான உச்ச வரம்பு கோரி வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in