கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியல், பழங்குடியினருக்கும் வருமான உச்ச வரம்பு கோரி வழக்கு

கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியல், பழங்குடியினருக்கும் வருமான உச்ச வரம்பு கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: கல்வி உரிமைச்​ சட்​டத்​தின் கீழ் 25 சதவீத இடஒதுக்​கீட்​டில் தனி​யார் பள்​ளி​களில் சேர்க்​கப்​படும் பட்​டியல் மற்​றும் பழங்​குடி​யின வகுப்​பினருக்​கும் வரு​மான உச்ச வரம்பை நிர்​ண​யம் செய்​யக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்​கள் இயக்​கத் தலை​வ​ரான ஈஸ்​வரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்​டத்​தின் கீழ் தனி​யார் பள்​ளி​களில் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​களுக்​கும், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய மாணவர்​களுக்​கும் 25 சதவீத இடஒதுக்​கீட்​டின் கீழ் பள்​ளி​களில் சேர்க்கை வழங்​கப்​படு​கிறது. பொருளா​தார ரீதி​யில் பின்​தங்​கிய குழந்​தைகளின் பெற்​றோருக்கு ஆண்​டுக்கு ரூ. 2 லட்​சம் என வரு​மான உச்ச வரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின குழந்​தைகளின் பெற்​றோருக்கு எந்த வரு​மான உச்ச வரம்​பும் நிர்​ண​யிக்​கப்​பட​வில்​லை.

சமூக ரீதி​யில் பின்​தங்​கிய பிரி​வினருக்கு வரு​மான உச்சவரம்பு நிர்​ண​யிக்​கப்​ப​டா​விட்​டால் வசதி​யானவர்​கள் கூட சாதி அடிப்​படை​யில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்​ளது.

எனவே பொருளா​தார ரீதி​யில் பின்​தங்​கிய பிரி​வினருக்கு வரு​மான உச்ச வரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது போல, சமூக ரீதி​யில் பின்தங்​கிய​வர்​களுக்​கும் வரு​மான உச்ச வரம்பை நிர்​ண​யிக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும். ஏற்​கெனவே மகா​ராஷ்டிரா மற்​றும் ஆந்​திரா உள்​ளிட்ட பிற மாநிலங்​களில் இருப்பதை போல தமிழகத்​தி​லும் சமூக ரீதி​யில் பின்​தங்​கிய பட்​டியல் மற்​றும் பழங்​குடி​யின வகுப்​பினருக்​கும் வரு​மான உச்ச வரம்பை நிர்​ண​யிக்​கக் கோரி கடந்​தாண்டு அக்டோபரில் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்​ளிக்​கல்​வித்​துறைக்கு உத்​தர​விட வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இவ்வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக பள்ளி கல்​வித்​துறைச் செய​லா​ளர், தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநர் உள்​ளிட்​டோர் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியல், பழங்குடியினருக்கும் வருமான உச்ச வரம்பு கோரி வழக்கு
வைபவ் சூர்யவன்ஷி விளாசுவது காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in