நீட், ஜேஇஇ எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம் நிலை என்ன?

பிரதிநித்துவப் படம்

பிரதிநித்துவப் படம்

Updated on
1 min read

திருச்சி: தமிழகத்தில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு வாரம் ஒருமுறைக்குப் பதிலாக தினந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தவும், அனைத்து பள்ளிகளுக்கும் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நீட், ஜேஇஇ, கிளாட், க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் மாவட்டத்துக்கு தலா ஒரு மாதிரிப் பள்ளி திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்​து, ‘வெற்​றிப் பள்​ளி​கள்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் வட்​டார அளவில் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளில் தகுதி பெற தேவையான மதிப்பெண்கள் உயர்ந்து கொண்டே வருவதாலும், முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கிலும் பயிற்சி வகுப்புகளை வாரத்துக்கு ஒருநாள் என்பதற்கு பதிலாக, நாள்தோறும் நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியது: நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி அளிப்பது குறித்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதில், தலைமையாசிரியர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு ஏற்ப, நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதுடன், குறிப்பிட்ட மையங்களில் மட்டு மல்லாது, அந்தப் பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதாவது, பள்ளி நேரம்போக மற்ற நேரங்களில் போட்டித் தேர்வுக்கான வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக சிறப்பு ஆசிரியர்களை கொண்டு வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த சாத்தியக் கூறுகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம் என்றனர்

<div class="paragraphs"><p>பிரதிநித்துவப் படம்</p></div>
“அவர்களும் கன்னடர்களே” - 3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அமைச்சர் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in