பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பில் 93.70% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பில் 93.70% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Updated on
1 min read

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்​வில் 93.70 சதவீத மாணவர்​கள் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்​கி வரு​கின்​றன. இந்த பாடத் திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இதற்​கிடையே, தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி தேர்வு முறை​களில் பல்​வேறு மாற்​றங்​களை சிபிஎஸ்இ மேற்​கொண்டு வரு​கிறது. அந்த வகை​யில் நடப்பு ஆண்டு முதல் 10-ம் வகுப்​புக்கு மட்​டும் 2 பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

‘முதல் கட்​ட​மாக பிப்​ர​வரி மாத​மும், 2-ம் கட்​ட​மாக மே மாத​மும் தேர்​வு​கள் நடை​பெறும். முதல் தேர்வை வழக்​க​மான முறை​யில் அனைத்து மாணவர்​களும் எழுத வேண்​டும். 2-ம் கட்​டத் தேர்வை விரும்​பிய​வர்​கள் எழுதலாம். மதிப்​பெண் அதி​கரிக்க விரும்​பு​கிறவர்​கள், முதல் தேர்​வில் பங்​கேற்க முடி​யாதவர்​கள் அல்​லது தேர்ச்சி பெற முடி​யாதவர்​கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக்​கொள்​ளலாம்’ என்று சிபிஎஸ்இ அறி​வித்​தது.

அதன்​படி, நடப்பு ஆண்டு 10-ம் வகுப்​புக்​கான முதல்​கட்ட பொதுத் தேர்வு பிப்​.17 முதல் மார்ச் 11-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. இந்த தேர்வை 24.72 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இதன் முடிவு​கள் ஏப்​ரல் மாத இறு​தி​யில் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், அதற்கு முன்​பாகவே 10-ம் வகுப்பு தேர்வு முடிவு​களை சிபிஎஸ்இ நேற்று வெளி​யிட்​டது. தேர்வு எழு​தி​ய​தில் 23.16 லட்​சம் (93.70%) பேர் தேர்ச்சி பெற்​றனர். இது 2025-ம் ஆண்​டை​விட 0.04 சதவீதம் அதி​கம். மாணவர்​கள் 92.69 சதவீத​மும், மாணவி​கள் 94.99 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். வழக்​கம​போல், தேர்ச்​சி​யில் மாணவி​கள் 2.3 சதவீதம் அதி​க​மாகும்.

மண்டல வாரி​யான தேர்ச்​சி​யில் 99.79 சதவீதம் பெற்று திரு​வனந்​த​புரம், விஜய​வாடா முன்​னிலை​யில் உள்​ளன. சென்னை 99.58 சதவீதம் பெற்​று 3-ம் இடத்​தில் உள்​ளது. 55,368 மாணவர்​கள் 95 சதவீதத்​துக்கு மேல் மதிப்​பெண்​களை பெற்​றுள்​ளனர். தேர்வு முடிவு​களை மாணவர்​கள் cbse.gov.in மற்​றும் https://results.nic.in ஆகிய இணை​யதளங்​களில் அறிய​லாம். மாணவர்​கள் மதிப்​பெண் சான்​றிதழ்​களை டிஜிலாக்​கர் வழியே பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். அடுத்​தகட்ட தேர்வு மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதுகுறித்த கூடு​தல் தகவல்​களை www.cbse.gov.in என்ற இணைய தளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என்று சிபிஎஸ்இ மண்டல அலு​வலர்​கள் தெரி​வித்​தனர்.

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பில் 93.70% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in