வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் வேலூர், மதுரை, திருச்சி உட்பட 13 நகரங்​களில் வெப்​பநிலை நேற்று 100 டிகிரியை தாண்​டியது. உள் மாவட்​டங்​களில் ஏப்​.19-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயர வாய்ப்பு உள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறியுள்ளதாவது: தென்​கிழக்கு மத்​தி​யப் பிரதேசம் முதல் மகா​ராஷ்டி​ரா, வடக்கு உள் கர்​நாட​கா, தமிழகம் வழி​யாக மன்​னார் வளை​குடா வரை சுமார் 900 மீட்​டர் உயரத்​தில் ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக இன்று (ஏப்​.16) முதல் 21-ம் தேதி வரை மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​களின் கடலோர பகு​தி​கள் மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும். தமிழகம், புதுச்​சேரி​யின் மற்ற பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வும்.

தமிழக உள் மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் இன்று முதல் 19-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​க​மாக இருக்​கக்​கூடும். கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் வெப்​பநிலை இயல்பை ஒட்​டியே இருக்​கும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். வெப்​பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை இருக்​கக்​கூடும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

13 இடங்​களில் வெயில் சதம்: தமிழகத்​தில் நேற்று மாலை 5.30 மணி வரையி​லான அளவு​களின்​படி, அதி​கபட்​ச​மாக கரூர் பரமத்​தி​யில் 106 டிகிரி, வேலூரில் 105, மதுரை விமான நிலை​யம், திருச்​சி, ஈரோட்​டில் 104, நாமக்​கல், சேலம், மதுரை மாநகரில் 103, திருப்​பத்​தூர், தரு​மபுரி​யில் 102, பாளை​யங்​கோட்​டை, கோவை​யில் 101, திருத்​தணி​யில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட் என வெயில் பதி​வாகி​யுள்​ளது.

வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in