தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கை​

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கை​
Updated on
1 min read

சென்னை: தமிழக மேல்​நிலைப் பள்​ளி​களில் மாண​வியர் சேர்க்கை 76 சதவீதம், மாணவர் சேர்க்கை 71 சதவீத​மாக அதி​கரித்து புதிய சாதனை படைக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை (யுடிஐஎஸ்​சி) விவரங்​கள் தொடர்​பாக தமிழக அரசு கூறி​யிருப்​ப​தாவது: மேல்​நிலைப் பள்​ளி​களி​லும், கல்​லூரி​களி​லும் சேரும் மாணவ மாண​வியர் எண்​ணிக்கை அதி​முக ஆட்​சியை விட அதி​கரித்து தமிழகம் சாதனை​கள் படைத்​துள்​ளது.

கடந்த 2020-21 அதி​முக ஆட்​சி​யில் மேல்​நிலைக் கல்வி மாண​வியர்​கள் சேர்க்கை 49.8 சதவீத​மாக இருந்த நிலை​யில், 2024-25ல் 76 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

அதேபோல, 2020-21 அதி​முக ஆட்​சி​யில் மேல்​நிலைக் கல்வி மாணவர்​கள் சேர்க்கை 46.6 சதவீத​மாக இருந்த நிலை​யில், 71 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

குஜ​ராத்​தில் மாணவி​கள் 24.7 சதவீதம், மாணவர்​கள் 24 சதவீதம், மகா​ராஷ்டி​ரா​வில் மாணவி​கள் 47.1 சதவீதம், மாணவர்​கள் 46.7 சதவீதம், உத்​தரப்​பிரதேசத்​தில் மாணவி​கள் 31.7 சதவீதம், மாணவர்​கள் 31.1 சதவீதம், ராஜஸ்​தானில் மாணவி​கள் 33.6 சதவீதம், மாணவர்​கள் 34.2 சதவீதம், மத்​தி​யப் பிரதேசத்​தில் மாணவி​கள் 24.9 சதவீதம், மாணவர்​கள் 24.7 சதவீதம் என சேர்க்கை விகிதம் உள்​ளது.

இதர மாநிலங்​களைக் காட்​டிலும் தமிழகத்​தில் மாணவர் சேர்க்கை அதி​கரித்​திருப்​ப​தற்​கு விடியல் பயணம், புது​மைப் ​பெண், தமிழ்ப் புதல்​வன் போன்ற திட்​டங்​களே காரணம். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கை​
திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in