திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: திரைப்பட இயக்​குநர் ஷங்​கருக்கு சொந்​த​மான ரூ.11.10 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் முடக்​கப்​பட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் நடவடிக்​கைகளுக்கு ஏற்​கனவே விதிக்​கப்​பட்ட தடையை நீட்​டித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இயக்​குநர் ஷங்​கரின் இயக்​கத்​தில் ரஜினி​காந்த் - ஐஸ்​வர்யா ராய் நடிப்​பில் வெளி​யான ‘எந்​திரன்’ படத்​தின் கதை​யின் காப்​புரிமை மீறல் தொடர்​பான வழக்​கில், ஷங்​கருக்கு சொந்​த​மான ரூ.11.10 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத்​துறை முடக்​கியது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இயக்​குநர் ஷங்​கர் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனுவை ஏற்​கனவே விசா​ரித்த நீதிப​தி​கள், ‘எந்​திரன்’ படத்​தின் கதை தொடர்​பாக தனி நபர் தொடர்ந்த வழக்கு விசா​ரணைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இயக்​குநர் ஷங்​கரின் சொத்​துக்களை அமலாக்​கத் துறை முடக்​கி​யிருப்​பது தேவையற்​றது எனக் கூறி, அமலாக்​கத் துறை​யின் நடவடிக்​கைக்கு இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.சுரேந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, இயக்​குநர் ஷங்​கர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “எந்​திரன் படக்​கதை விவ​காரத்​தில் ஷங்​கருக்கு எதி​ரான வழக்​கு​களை புகார்​தா​ரர் திரும்​பப் பெற்​று​விட்​ட​தால் மூல வழக்கு எது​வும் இல்​லை” என்​றார்.

இதுதொடர்​பாக, விளக்​கமளிக்க அவகாசம் வழங்க வேண்​டுமென அமலாக்​கத் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்​து, தடையை நீட்​டித்த நீதிப​தி​கள், இந்த வழக்கு வி​சா​ரணையை ஜூன் 15-க்​கு தள்ளி வைத்தனர்.

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு
நத்தம்: திமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான குவாரியில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in