

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது.
தற்போது 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வெவ்வேறு படிப்புகளுக்கான கல்வித்தகுதிகள், கட்டண விவரங்கள், சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) அறிந்துகொள்ளலாம்.
இப்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.