கோப்புப்படம்
சென்னை: கல்வி உதவித் தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் மாவட்டம்தோறும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டு கிடைக்கும்.
நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவ.21-ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு 15ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது மாணவர்கள் நலன் கருதி கால அவகாசம் அக்.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.