1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதிநடைபெறவுள்ளது. இதையடுத்து 1 முதல் 9-ம் வகுப்புவரைமுழுஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6-ல் தொடங்கி 16-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு
ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி: 234 தொகுதிகளில் போட்டிடுவதாக அறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in