‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: '​டான்செட்', 'சீட்​டா'' நுழைவுத்​ தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி ஏப்​ரல் 15 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்​ளது.

அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் கல்​லூரி​களில் உள்ள எம்​பிஏ, எம்​சிஏ ஆகிய படிப்​பு​களில் சேர தமிழ்​நாடு பொது நுழைவுத் தேர்​விலும் (டான்​செட்) எம்இ, எம்​டெக், எம்​பிளான், எம்​ஆர்க் ஆகிய முது​நிலை பொறி​யியல் படிப்​பு​களில் சேரு​வதற்கு பொது பொறி​யியல் நுழைவுத் ​தேர்​விலும் (சீட்​டா) தேர்ச்சி பெற வேண்​டும்.

இந்த தேர்​வு​களை தமிழக அரசு சார்​பில் அண்ணா பல்​கலைக்​கழகம் நடத்​துகிறது. வரும் கல்வி ஆண்டு (2026-27) மாணவர் சேர்க்​கைக்​கான டான்​செட், சீட்டா நுழைவுத் தேர்​வு​களுக்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளி​யிடப்​பட்டு அன்​றைய தினமே ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவு தொடங்​கியது.

ஏப்​ரல் 15 கடைசி தேதி

விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஏப்​ரல் 10-ம் தேதி என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், மாணவர்​களின் நலனை கருத்​தில்​கொண்டு கடைசி தேதி ஏப்​ரல் 15 வரை நீட்​டிக்​கப்​பட்​டிருப்​ப​தாக அண்ணா பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.

எனவே, டான்​செட், சீட்டா நுழைவுத்​ தேர்​வெழுத விரும்​பும் மாணவர்​கள் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்தை (www.annauniv.edu) பயன்​படுத்தி ஏப்​ரல் 15 வரை விண்​ணப்​பிக்​கலாம்.

ஏற்​கனவே அறிவிக்​கப்​பட்​டபடி, டான்செட் நுழைவுத்​தேர்வு மே 9-ம் தேதி​யும், சீட்டா நுழைவுத்​தேர்வு மே 10-ம் தேதி​யும்​ நடை​பெற உள்​ளன.

‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகத்​தில் இந்த முறை திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்: பியூஸ் கோயல் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in