தமிழகத்​தில் இந்த முறை திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்: பியூஸ் கோயல் கருத்து

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல்.

Updated on
1 min read

புதுக்கோட்டை: தமிழகத்​தில் இந்த முறை திமுக கூட்​ட​ணியை மக்​கள் புறக்​கணிப்​பார்​கள் என மத்​திய தொழில் மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் பியூஸ் கோயல் கூறினார்.

புதுக்​கோட்டை தொகு​தி​யில் போட்​டி​யிடும் பாஜக வேட்​பாளர் என்​.​ராமச்​சந்​திரனை ஆதரித்​து, பாஜக மாவட்ட அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் பியூஸ் கோயல் பேசி​யது: திமுக ஆட்​சி​யில் லஞ்​சம், ஊழலால் தமிழகம் சீர்​கெட்​டு​விட்​டது.

சனாதனத்துக்கு எதிராகபேசி தமிழக மக்​களை புண்​படுத்திவரும் உதயநிதி ஸ்டா​லினை மக்​கள் ஏற்​றுக்​ கொள்ள மாட்​டார்​கள். மத்​தி​யில் காங்​கிரஸ் ஆட்​சி​யை​விட பாஜக ஆட்​சி​யில் 5 மடங்கு அதி​க​மாக நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசின் ஜல் ஜீவன் திட்​டத்​தின் மூலம் ஒவ்வொரு குடும்​பத்​துக்​கும் குடிநீர் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் பாது​காப்பு இல்​லாத​தால் பெண்​கள் அச்​சத்​துடன் வாழ்ந்து வரு​கின்​றனர்.

இளைஞர்​கள் போதை பொருட்​களால் உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். சுகா​தா​ரத் துறை​யின் செயல்​பாடு மிக மோச​மாக உள்ளது.

தமிழக முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், எம்​.பி. கனி​மொழி, உறவினர் சபரீசன் ஆகியோர் ஊழல் செய்​வதையே முதன்​மை​யாக கொண்​டுள்​ளனர். தமிழக மக்​கள் இந்த முறை திமுக கூட்​ட​ணியை புறக்​கணிப்​பார்​கள். அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை முதல்​வ​ராக அமர்த்​து​வார்​கள்.

தமிழகத்​தில் மத்​திய அரசு இந்​தியை திணிக்க முயற்​சிப்​ப​தாக​வும், அதை ஏற்​காத​தால் கல்விக்​கான தொகையை விடுவிக்க மத்​திய அரசு மறுக்​கிறது என்​றும் ரூ.10 ஆயிரம் கோடியை கொடுத்​தா​லும் இந்​தியை ஏற்க மாட்​டேன் என்று முதல்​வர் ஸ்டா​லின் கூறுகிறார்.

ஆனால், தேசிய கல்விக் கொள்​கை​யில் எந்த இடத்​தி​லும் இந்த மொழியைத்​தான் கற்​றுக்​கொடுக்க வேண்​டும் என்று குறிப்​பிட​வில்​லை. இக்​கல்வி கொள்கை குறித்து தமிழக முதல்​வர் தவறான பிரச்​சா​ரத்தை செய்து வரு​கிறார்.

முதல்​வர் ஸ்டா​லின் குடும்​பத்​தினர் நடத்​தும் கல்வி நிறு​வனங்​களில் பயிலும் மாணவர்​களுக்கு ஏன் தமிழ் மொழி கற்​பிக்​கப்​பட​வில்​லை. அனைத்து மாணவர்​களுக்​கும் தமிழை கற்றுக்​கொடுக்க வேண்​டும் என்றார்.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல்.</p></div>
விஜய் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்ட தூத்துக்குடி அஜிதா ஆக்னல் திமுகவில் ஐக்கியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in