பிளஸ்-2 படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: பிளஸ்-2 படித்து முடித்த ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யின மாணவர்​கள், 3 ஆண்டு இளங்​கலை ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்​புக்கு விண்​ணப்​பிக்​கு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் மூலம் பிளஸ்-2 முடித்த ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள், தேசிய தேர்வு முகமை சார்​பில் நடத்​தப்​படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு மூல​மாக, தரமணி​யில் இயங்கி வரும் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி அண்ட் அப்​ளைடு நியூட்​ரிஷன் நிறு​வனத்​தில் 3 ஆண்டு முழு நேர இளங்​கலை அறி​வியல் பட்​டப் படிப்​பில் சேர்ந்து பயில விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.

தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு வரும் ஏப்​.25-ம் தேதி ஆன்​லைன் வாயி​லாக நடை​பெறவுள்​ளது. இத்​தேர்வை எழுத மாணவர்​கள் மார்ச் 25-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தேர்வு தொடர்​பான கூடு​தல் விவரங்​களை அறிய​வும், முன்​ப​திவு செய்​ய​வும் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணை​யதளத்தை அணுகலாம்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி​யில் பயில, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள் பிளஸ்-2 வகுப்​பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும்.

குடும்ப ஆண்டு வரு​மானம் ரூ.3 லட்​சத்​துக்​குள் இருக்க வேண்​டும். தாட்கோ மூல​மாக படிப்​பில் சேர www.tahdco.com என்ற இணை​யதளத்​தில் பதிவு செய்ய வேண்​டும்.

படிப்​புக்​கான செலவை தாட்கோ ஏற்​கும். படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடிக்​கும் பட்​சத்​தில் மாணவர்​களுக்கு நட்​சத்​திர விடு​தி​கள், உயர்தர உணவகங்​கள், விமானத் துறை, கப்​பல் துறை மற்​றும் சேவைத் துறை சார்ந்த நிறு​வனங்​களில் பணிபுரிய வழி​வகை செய்​யப்​படும். ஆரம்ப கால மாத ஊதி​ய​மாக ரூ.25 ஆயிரம்​ முதல்​ ரூ.35 ஆயிரம்​ வரை பெறலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பிளஸ்-2 படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஆவடி பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.8.78 லட்சம் அபராதம் விதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in