

கோப்புப் படம்
சென்னை: ஆவடி பகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு ரூ.8.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் கடந்த 11-ம் தேதி ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, மின் நுகர்வோருக்கு ரூ.8,77,593 அபராதம் விதிக்கப்பட்டது.
புகார் தெரிவிக்கலாம்:
மேலும், சம்பந்தப்பட்ட நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.36 ஆயிரம் செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு தொடர்பான தகவல்களை சென்னை அமலாக்க செயற்பொறியாளரிடம் கைபேசி 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.