Last Updated : 09 Feb, 2023 04:03 PM

 

Published : 09 Feb 2023 04:03 PM
Last Updated : 09 Feb 2023 04:03 PM

கிருஷ்ணகிரி | அரசுப் பள்ளி வகுப்பறையின் தரம் உயர்த்த சேமிப்பு பணத்தை வழங்கிய 3-ம் வகுப்பு மாணவர்

அகரம் அரசு தொடக்கப் பள்ளி வளர்ச்சிக்காக, அப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் பிரேம்குமார் தனது உண்டியல் சேமிப்பு பணம் மற்றும் அவரது தந்தை பங்களிப்பாக ரூ.40 ஆயிரம் பணத்தை ஆசிரியரிடம் வழங்கினர்.

கிருஷ்ணகிரி: அகரம் அரசு பள்ளியில் வகுப்பறை தரம் உயர்த்தும் பணிகளுக்கு தனது சேமிப்பு பணத்தை 3-ம் வகுப்பு மாணவர் வழங்கியுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள் சிமென்ட் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்க திட்டமிட்ட ஆசிரியர்கள், இதற்காக அரசு வழங்கும் நிதியை பயன்படுத்த முடிவு செய்தனர். அரசு நிதியில் ரூ.15,000-ஐ பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் பிரேம்குமார் (8), பெற்றோர் செலவிற்கு கொடுக்கும் சிறுசிறு தொகையை உண்டியலில் சேர்த்து வைக்கும் பழக்கம் உடையவர். தனது உண்டியல் சேமிப்பு பணத்தை, பள்ளியின் வளர்ச்சிக்கும், டைல்ஸ் கற்கள் பதிக்க வழங்க முடிவு செய்து, மாணவன் பிரேம்குமார், தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரேம்குமாரின் தந்தை சீனிவாசன், மகனின் உண்டியல் சேமிப்பு பணம் ரூ.1488 மற்றும் தன்னுடைய பங்களிப்பு தொகையுடன் சேர்ந்து ரூ.41,500-ஐ பள்ளியின் ஆசிரியர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வினை படம் எடுக்கப்பட்டு, உள்ளுர் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக பரவியது. பள்ளி மாணவனின் செயலை பாராட்டியும், கிராம மக்கள் தங்களால் இயன்ற உதவியை பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x