Published : 08 Jan 2023 04:18 AM
Last Updated : 08 Jan 2023 04:18 AM

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு: அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் காலி

சென்னை: அரசுக் கல்லூரிகளில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் ஒன்றான யுனானியில் 19 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 350 அரசு இடங்கள் நிரம்பாத நிலையில், 900-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கென 5 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மேலும், 26 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,990இடங்களில் அகில இந்தியஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவற்றில் 65 சதவீதம் மாநில அரசு போக 35 சதவீதம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாக உள்ளன.

இந்நிலையில், இந்தாண்டு நடத்தப்பட்ட கலந்தாய்வில், அரசு கல்லூரிகளில் 19 யுனானி இடங்கள் நிரம்பவில்லை. மேலும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஓமியோபதி, 54 ஆயுர்வேதம், 24 சித்தா இடங்கள்நிரம்பவில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் காலியாக உள்ளன. 521 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலும் 90 சதவீதம் காலியாக உள்ளது.

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதே காலியிடம் அதிகரிப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x