Last Updated : 09 Aug, 2023 04:07 AM

 

Published : 09 Aug 2023 04:07 AM
Last Updated : 09 Aug 2023 04:07 AM

‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ இந்த ஆண்டு முதல் அறிமுகம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000

விருதுநகர்: தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பிளஸ்-2 முதல் பட்டப் படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக மத்திய அரசால் வழங்கப் படுகிறது.

இதேபோன்று, உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதல மைச்சர் திறனாய்வுத் தேர்வு நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகை யிலும், 2023-14-ம் கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு..: அரசு பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண் ணப்பிக்கலாம், இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வி யாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளங்கலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.

இரண்டு தாள்கள்: தமிழக அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறி வியல், சமூக அறிவியல் வினாக் களும் இடம்பெறும்.

இத்தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். செப்டம்பர் 23-ம் தேதி (சனிக் கிழமை) தேர்வு நடை பெறும். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இம்மாதம் 18-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x