Published : 23 Jun 2023 05:13 AM
Last Updated : 23 Jun 2023 05:13 AM
சென்னை: குவஹாட்டி ஐஐடி சமீபத்தில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மீண்டும் தனது பெருமையை நிலை நாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆலன் இயக்குநர் ராஜேஷ் மகேஸ்வரி கூறும்போது, “தேசிய அளவிலான தேர்வுப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஆலன் மாணவர்கள் 4 பேர் வந்து பெருமை சேர்த்துள்ளனர். ராகவ் கோயல் அகில இந்திய அளவில் 4-ம் இடம், பிரபவ் கந்தல்வால் 6-ம் இடம், மலய் கேடியா 8-ம் இடம், நாகிரெட்டி பாலாஜி 9-ம் இடத்தில் வந்துள்ளனர்.
அதேபோல ஹர்ஷித் கன்சால் 16-ம் இடம், மவ்லிக் ஜிந்தால் 19-ம் இடம், சமீர் அர்விந்த் பாட்டில் 20-ம் இடம், தேஷங்க் பிரதாப் சிங் 22-ம் இடம், ஜட்சயா ஜரிவாலா 24-ம் இடம், மாயங்க் சானி 26-ம் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் முதல் 50 இடங்களில் 19 ஆலன் மாணவ, மாணவிகளும், முதல் 100 இடங்களில் 37 ஆலன் மாணவர்களும், முதல் 200 இடங்களில் 64 பேரும், முதல் 500-ல் 158 பேரும் வந்துள்ளனர். மொத்தம் 6,647 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு இயக்குநர் ராஜேஷ் மகேஸ்வரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT