சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
Updated on
1 min read

சென்னை: ​திரு​மணம் செயது கொள்​வ​தாகக்​கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்​கொடுமை செய்​ததுடன், வீட்​டில் இருந்த தங்க நகை மற்​றும் பணத்​தை​யும் மிரட்டி பெற்ற இளைஞருக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து சென்னை அல்​லிக்​குளம் மகளிர் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த 20 வயது இளைஞ​ரான ஞானப்​பிர​காஷ் அசோக்​நகர் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்​துள்​ளார். திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​கூறி ஞானப்​பிர​காஷ் அந்த சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

திரு​மணம் முடிந்​த​பிறகு வெளி​நாட்​டுக்கு சென்​று​விடலாம் என அவர் கூறியதை நம்பி அந்த சிறுமி தனது வீட்​டில் இருந்த தங்க நகை மற்​றும் ரூ.10.75 லட்​சத்தை பெற்​றோருக்கு தெரி​யாமல் ஞானபிர​காஷூக்கு கொடுத்​துள்​ளார்.

திரைத்​துறை​யில் பணி​யாற்​றும் சிறுமி​யின் தந்தை பணி​யாளர்​களுக்கு வழங்க வைத்​திருந்த பணம் சிறுக, சிறுக காணா​மல் போவதைக் கண்​டு​பிடித்து மகளிடம் விசா​ரித்​துள்​ளார்.

அப்​போது அந்த சிறுமி தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​கூறிய இளைஞரிடம் தங்க நகை மற்​றும் தொகையை கொடுத்​தது மட்​டுமில்​லாமல், தன்னை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்த விவரங்​களை​யும் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின்​பேரில் அசோக்​நகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து ஞானப்​பிர​காஷை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை அல்​லிக்​குளம் மகளிர் நீதி​மன்​றத்​தில் நடந்​தது. அரசு தரப்​பில் வழக்​கறிஞர் வெற்றி ஆஜராகி வாதிட்​டார்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி ஜி. பிர​பாகரன், குற்​றம் சாட்​டப்​பட்ட ஞானப்​பிர​காஷூக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தார். மேலும், பா​திக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7.50 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும்​ உத்​தர​விட்​டு்ள்​ளார்​.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
ரூ.10 லட்சம், 26 பவுன் நகை மோசடி: திருச்சி சிவா மகள், மருமகன் மீது போலீஸில் புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in