ரூ.10 லட்சம், 26 பவுன் நகை மோசடி: திருச்சி சிவா மகள், மருமகன் மீது போலீஸில் புகார்

ரூ.10 லட்சம், 26 பவுன் நகை மோசடி: திருச்சி சிவா மகள், மருமகன் மீது போலீஸில் புகார்
Updated on
1 min read

சென்னை: நண்​பர் என பழகி ரூ.10 லட்​சம் மற்​றும் 26 பவுன் தங்க நகைகளை வாங்​கிக் கொண்டு திருப்பி தராமல் மிரட்​டு​வ​தாக, அயனாவரத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்​து​வர், திருச்சி சிவா எம்​பி-​யின் மகள் மற்​றும் மரு​மகன் மீது காவல்​துறை​யில் புகார் அளித்​துள்​ளார்.

சென்​னை, அயனாவரம், சம்​ருதி அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வருபவர் வினா விலாசினி (46). இவரும், அவரது கணவர் நிர்​மலும் அயனாவரத்​தில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் ஹோமியோபதி மருத்​து​வர்​களாக பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அயனாவரம் காவல் உதவி ஆணை​யரிடம் வினா விலாசினி அளித்​துள்ள புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: 10 ஆண்​டு​களுக்கு முன்பு காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்​த​போது, அதே கட்​சி​யில் இருந்த திருச்சி முத்​துக்​கு​மார் என்​பவருடன் நட்பு ஏற்​பட்​டது.

அந்த நட்பை பயன்​படுத்​தி, அவசரத் தேவைக்​காக எனக் கூறி பல்​வேறு தவணை​களில் ரொக்​க​மாக​வும், கூகுள் பே உள்​ளிட்ட இணை​ய​வழி பரிவர்த்​தனை​கள் மூல​மாக​வும் மொத்​தம் ரூ.10 லட்​சம் பெற்​றார்.

இதனைத் தொடர்ந்​து, 2023-ம் ஆண்டு அவரது மனைவி காயத்ரி சிவா மூலம் முதலில் 26 பவுன் தங்க நகைகளும், பின்​னர், மேலும் 24 பவுன் தங்க நகைகளும் வாங்​கிச் சென்​றனர்.

பின்​னர், பலமுறை கேட்​டதையடுத்து 24 பவுன் நகைகளை மட்​டும் திருப்​பிக் கொடுத்​தனர். ஆனால், மீத​முள்ள 26 பவுன் தங்க நகைகளை​யும், ரூ.10 லட்​சத்​தை​யும் திருப்​பித் தர மறுப்​பதுடன், கேட்​டால் மிரட்​டு​வ​தாக​வும் புகாரில் தெரி​வித்​துள்​ளார்.

இந்த புகாரில் குறிப்​பிடப்​பட்​டுள்ள முத்​துக்​கு​மார், தற்​போதைய திமுக எம்​பி-​யான திருச்சி சிவா​வின் மூத்த மரு​மகன் என்​றும், காயத்ரி சிவா அவரது மூத்த மகள் என்​றும் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த புகார் கடந்த 27-ம் தேதி பெறப்​பட்ட நிலை​யில், அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். விசா​ரணை முடி​வின் அடிப்​படை​யில், அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று போலீஸ்​ தரப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம், 26 பவுன் நகை மோசடி: திருச்சி சிவா மகள், மருமகன் மீது போலீஸில் புகார்
பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேர் பிடிபட்டனர்: பெற்றோரை வரவழைத்து எச்சரித்த போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in