பொன்னேரியில் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை: இளைஞர் சிறையில் அடைப்பு

பொன்னேரியில் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை: இளைஞர் சிறையில் அடைப்பு
Updated on: 
1 min read

பொன்​னேரி: எண்​ணூர், தாழங்​குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்த தம்​ப​தி​யின் 2½ வயது பெண் குழந்​தைக்கு கடந்த ஒரு வாரத்​துக்கு முன்பு திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது.

இதையடுத்து பெற்​றோர், குழந்​தையை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். அங்கு மருத்​து​வர்​களின் பரிசோதனை​யில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த குழந்​தை​யின் தாய் கடந்த 23-ம் தேதி எண்​ணூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அப்​பு​காரின் அடிப்​படை​யில் போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அவ்​வி​சா​ரணை​யில், எண்​ணூர், தாழங்​குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்த ரஞ்​சித்​கு​மார் (32), கடந்த அக். 15 மற்​றும் 17 ஆகிய தேதி​களில் குழந்தையை தன் வீட்​டுக்கு தூக்​கிச் சென்று பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கியது தெரிய வந்​த​தாக போலீ​ஸார் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து நேற்று ரஞ்​சித்​கு​மாரை போலீ​ஸார் கைது செய்​து, நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யிலடைத்​தனர். பாதிக்​கப்​பட்ட குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பொன்னேரியில் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை: இளைஞர் சிறையில் அடைப்பு
சென்னையில் மின்வெட்டை தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்: மின்வாரியம் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in