

சென்னை: ஆபாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவேன் என மர்ம நபர் மிரட்டியதால், சாலிகிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி ருசித்தா (27). இவரை கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர் ஒருவர்
செல்போனில் அழைத்து, அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ருசித்தா தனது கணவரிடம் கூறியபோது, அவர் சமாதானம் செய்துள்ளார். இருந்தாலும் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த ருச்சிதாதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய கணவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ருசித்தா சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீஸார், உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? எதற்காக மிரட்டினார்? என்பது குறித்து சைபர் க்ரைம் உதவியுடன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.