சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக நடித்து பயணியிடம் தங்க நெக்லஸை பறித்த இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக நடித்து பயணியிடம் தங்க நெக்லஸை பறித்த இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் சுங்க அதி​காரி​யாக நடித்​து, விமான பயணி​யிடம் ரூ.12 லட்​சம் மதிப்​புள்ள தங்க நெக்லஸை பறித்​துச் சென்ற இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை அண்​ணாநகரைச் சேர்ந்​தவர் நந்​தகோ​பால் (23). விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். சில தினங்​களுக்கு முன்பு கோவை​யில் இருந்து சென்​னைக்கு விமானத்​தில் வரும் பெண்​ணிடம் ரூ.12 லட்​சம் மதிப்​புள்ள 12 சவரன் நெக்​லஸ் பார்​சலை வாங்​கிச் செல்​வதற்​காக, சென்னை விமான நிலை​யம் சென்​றிருந்​தார்.

அந்த பெண் வந்​ததும், பார்​சலை பெற்​று​கொண்​டார். பின்​னர், இரு​வரும் விமான நிலைய டெர்​மினல்-1 போர்​டிகோ பகு​தி​யில் நடந்து சென்று கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்​கிருந்த ஒரு நபர், தான் ஒரு சுங்​கத்​துறை அதி​காரி எனக்​கூறி, அவர்​களை மிரட்டி தங்க நகையை பறித்​துச் சென்​றார். இதுகுறித்து விமான நிலை​யத்​தில் இருந்த மத்​திய தொழில் பாது​காப்பு படை​யினர், சுங்க அதி​காரி​கள் ஆகியோரிடம் புகார் தெரி​வித்​தனர்.

தொடர்ந்து சென்னை விமான நிலைய போலீசிலும் புகார் அளிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலை​யத்​தில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​து, தங்க நகையை பறித்​துச் சென்ற நபரை பிடிக்க போலீ​சார் தீவிர முயற்சி மேற்​கொண்​டனர்.

ரேபிட்டோ ஓட்​டு​நர் இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு 10 மணி​யள​வில் சென்னை விமான நிலைய காவல் நிலை​யத்​தில் திருச்​சி​யைச் சேர்ந்த சையது முஷ்ரப் (23) என்​பவர் வழக்​கறிஞர் ஒரு​வரோடு வந்​து, சரண் அடைந்​தார்.

அப்​போது அவர் கூறுகை​யில், திருச்​சி​யைச் சேர்ந்த நான் சென்னை மடிப்​பாக்​கம் ராம் நகரில் வசிக்​கிறேன். சென்னை விமான நிலை​யத்​தில் வாடகை கார்​களுக்கு சவாரி பிடிக்​கும் புரோக்​க​ராக இருக்​கிறேன். ரேபிட்டோ ஓட்​டு​கிறேன்.

சம்​பவம் நடந்த அன்று ஒரு ஆணும், இளம்​பெண் ஒரு​வரும், ஒரு கவரில் இருந்து தங்க நெக்​லஸை எடுத்து பார்த்து பேசிக்​கொண்டு நின்​றனர். அதைப் பார்த்​ததும் நான் அவர்​களிடம் சென்​று, சுங்​கத்​துறை அதி​காரி போல் நடித்​து, அந்த நெக்​லஸை பறித்​துக் கொண்டு ஓடி​விட்​டேன்.

போலீ​சார் என்னை தேடு​கிறார்​கள் என்று தெரிந்​ததும், நானாக வந்து சரணடைந்து விட்​டேன் என்று தெரி​வித்​து, தங்க நெக்​லஸை ஒப்​படைத்​தார். இதையடுத்​து, போலீ​சார் சையது முஷ்ரப்பை கைது செய்து நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி சிறை​யில்​ அடைத்​தனர்​.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக நடித்து பயணியிடம் தங்க நெக்லஸை பறித்த இளைஞர் கைது
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஐடி ஊழியர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in