வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த மேலும் ஒருவர் விமான நிலையத்தில் பிடிபட்டார்

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த மேலும் ஒருவர் விமான நிலையத்தில் பிடிபட்டார்
Updated on
1 min read

சென்னை: வெளி​நாட்​டில் குடியுரிமை பெற்​று, தமிழகத்​தில் சட்ட விரோத​மாக வாக்​களித்த மேலும் ஒரு​வர், விமான நிலை​யத்​தில் பிடிபட்​டார். இதையடுத்​து, கைது செய்​யப்​பட்​டோரின் எண்​ணிக்கை 19 ஆக உயர்ந்​துள்​ளது.

சென்னை விமான நிலை​யத்​தில், நேற்று அதி​காலை 3.50 மணிக்​கு, சென்​னை​யில் இருந்து கத்​தார் நாட்டு தலைநகர் தோகா செல்​லும், விமானத்​தின் பயணி​கள் விமானம் புறப்பட தயா​ரானது.

அந்த விமானத்​தில் பயணம் செய்ய வந்த பயணி​களின் பாஸ்​போர்ட் ஆவணங்​களை, குடி​யுரிமை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர். அப்​போது, அருப்​புக்​கோட்​டையைச் சேர்ந்த ஆபிர​காம் (65) என்​பவர், தோகா வழி​யாக, பிரான்ஸ் செல்​வதற்காக வந்​தார்.

அவர் இலங்கை குடி​யுரிமை பெற்​றவர். இதனால், அவர் இலங்கை நாட்​டின் பாஸ்​போர்ட் வைத்​திருந்​தார். அவருடைய கை விரல்​களை ஆய்வு செய்த போது, இடதுகை ஆள்​காட்டி விரலில், தேர்​தலில் வாக்​களித்​ததற்​கான அடை​யாள மை இருந்​ததை, குடி​யுரிமை அதி​காரி​கள் கண்​டு​ பிடித்​தனர்.

இதையடுத்​து, குடி​யுரிமை அதி​காரி​கள் அவரை நிறுத்தி வைத்​து, விசா​ரித்​தனர். விசா​ரணை​யில், இந்​தி​ய​ரான ஆபிர​காம், சில ஆண்​டு​களுக்கு முன்பு இலங்கை குடி​யுரிமை பெற்​று​விட்​டார்.

அதன் பின்​பு, இப்​போது பிரான்ஸ் நாட்​டில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, கடந்த ஏப்​ரல் மாதம் சொந்த ஊர் வந்​தார்.

அவருடைய சொந்த தொகு​தி​யான அருப்​புக்​கோட்டை வாக்​குச்​சாவடி​யில், வாக்​களித்​ததும், தற்​போது, தோகா, வழி​யாக பிரான்ஸ் செல்ல முயன்ற போது பிடிபட்​டுள்​ளார்.

இந்​திய குடி​யுரிமை பெற்​றவர்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடை​பெறும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடி​யும். இந்​தி​யர்​களாக இருந்​தா​லும், வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்று அந்த நாடு​களில் நிரந்​தர​மாக வசித்து வந்​தால், அவர்​கள் இந்​திய தேர்​தல்​களில் வாக்​களிப்​பது சட்​டப்​படி குற்​றம்.

இப்​படி, தமிழகத்​தில் சமீபத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் வெளி​நாடு​களில் குடி​யுரிமை பெற்​றவர்​கள், சென்​னை, திருச்​சி, கோவை, மதுரை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், விழுப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தேர்​தல் ஆணை​யத்​தின் விதி​களை மீறி சட்ட விரோத​மாக வாக்​களித்​த​தாக இதற்கு முன்​னர் 18 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த மேலும் ஒருவர் விமான நிலையத்தில் பிடிபட்டார்
வன்னியரசு அமைச்சராகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in