சென்னை | வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் அரசு உதவி தொகை தருவதாக பெண்ணிடம் பணம் பறிப்பு

சென்னை | வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் அரசு உதவி தொகை தருவதாக பெண்ணிடம் பணம் பறிப்பு
Updated on
1 min read

சென்னை: வீடு தேடி கல்வி திட்​டத்​தின் கீழ், அரசு உதவித் தொகை தரு​வ​தாக, நூதன முறை​யில் பெண்​ணிடம் பணம் பறிக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

சென்​னை, அபி​ராமபுரம், சேமியர்ஸ் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் நாஸியா நிஷா. இந்​நிலை​யில், கடந்த 23-ம் தேதி நாஸி​யாவை செல்​போனில் தொடர்பு கொண்டு பேசிய அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர், உங்​களது மகளுக்கு தமிழக அரசு வீடு தேடி கல்வி திட்​டத்​தின் கீழ், கல்​லூரி உதவி தொகை​யாக ரூ.48,500 வந்​துள்​ளது.

30 நிமிடங்​களில் அந்த பணம் உங்​கள் வங்கி கணக்​கில் வரவு வைக்​கப்​படும் என தெரி​வித்​துள்​ளார். மேலும், அந்த பணம் உங்​களது வங்கி கணக்​கில் வரவு வைக்க நாங்​கள் அனுப்​பும் க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்​யுங்​கள்.

பின்​னர், நாங்​கள் சொல்​வது​போல் அடுத்​தடுத்து செயல்​படுங்​கள் என கூறி க்யூஆர் கோர்டை அனுப்பி வைத்​துள்​ளார்.

அதை ஸ்கேன் செய்த சிறிது நேரத்​தில் நாஸியா நிஷா வங்கி கணக்​கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்​பட்​டுள்​ள​தாக குறுந்​தகவல் வந்​துள்​ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸியா நிஷா, இது தொடர்​பாக, அபி​ராமபுரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து நூதன முறை​யில் பணம் பறித்​த நபரை தேடி வருகின்றனர்.

சென்னை | வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் அரசு உதவி தொகை தருவதாக பெண்ணிடம் பணம் பறிப்பு
பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மேம்பாடு தொடர்பாக ஐஐடி அறக்கட்டளை-ராணுவம் ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in