கொடுங்கையூரில் மழைநீர் பம்பிங் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நவீன் குமார், அஸ்​மத் பாஷா

நவீன் குமார், அஸ்​மத் பாஷா

Updated on: 
1 min read

சென்னை: ​கொடுங்​கையூரில் மழை நீர் பம்​பிங் தொட்​டி​யில் விஷ​வாயு தாக்கி 2 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர்.

சென்​னை​யில் வடகிழக்கு பரு​வ​மழை விரை​வில் தொடங்க உள்​ளதையொட்​டி, மழைநீர் தேங்​கு​வதை தடுக்க மாநக​ராட்சி பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது.

இதன் ஒரு பகு​தி​யாக, மழைநீர் தேங்​கும் இடங்​களில் இருந்து தண்​ணீரை வெளி​யேற்​று​வதற்​காக பம்​பிங் வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில், சென்னை மாநக​ராட்சி மண்​டலம்​-4, பெரம்​பூர் சட்​டமன்​றத் தொகு​திக்கு உட்​பட்ட வார்​டு-34, கொடுங்​கையூர் தென்​றல் நகர் 3-வது தெரு​வில் மழைநீரை வெளி​யேற்​று​வதற்​காக சுமார் 20 அடி ஆழத்​தில் தொட்டி அமைக்​கப்​பட்​டிருந்​தது.

இதில், தலா 25 குதிரைத்​திறன் கொண்ட 2 மின்​மோட்​டார்​கள் பொருத்​தப்​பட்​டிருந்​தன. அவற்​றில் ஒரு மோட்​டார் சமீபத்​தில் பழுதடைந்​தது.

இதை சரிசெய்​வதற்​காக வேலூர் மாவட்​டம், ஆற்​காடு, பெரிய அஸ்​தி​னாபுரம் மேட்​டுத் தெரு​வைச் சேர்ந்த அஸ்​மத் பாஷா (38), மேற்கு தாம்​பரம் அம்​பேத்​கர் தெரு​வைச் சேர்ந்த நவீன்​கு​மார் (34) ஆகிய தனி​யார் தொழில்​நுட்ப பணி​யாளர்​கள் நேற்று அழைத்து வரப்​பட்​டனர்.

இரு​வரும் காலை 10.30 மணி முதல் மோட்​டாரை பழுது​பார்க்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். பிற்​பகல் 3 மணி​யள​வில், நவீன்​கு​மார் மோட்​டாரை சரிசெய்​வதற்​காக 20 அடி ஆழ பள்​ளத்​துக்​குள் இறங்​கி​னார். அப்​போது, விஷ​வாயு தாக்​கிய​தில் அங்​கேயே மயங்கி விழுந்​தார்.

இதைப் பார்த்த அஸ்​மத் பாஷா, அவரை காப்​பாற்​று​வதற்​காக தொட்​டிக்​குள் இறங்​கி​னார். அப்​போது அவரும் விஷ​வாயு தாக்கி மயங்கி விழுந்​தார். இதுகுறித்து உடன் பணி​யாற்​றிய​வர்​கள் போலீ​ஸாருக்​கும், தீயணைப்​புத் துறை​யினருக்​கும் தகவல் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, மாதவரம் தீயணைப்பு நிலைய அதி​காரி முத்து வீரப்​பன் தலை​மையி​லான வீரர்​கள் சம்பவ இடத்​திற்கு விரைந்து சென்​றனர். உரிய பாது​காப்பு நடை​முறை​களை பின்​பற்​றி, இரு​வரை​யும் கயிறு கட்டி மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

சுமார் ஒன்​றரை மணி நேர போராட்​டத்​துக்​குப் பிறகு, மாலை 4.30 மணி​யள​வில் இரு​வரும் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். இதையடுத்து அவர்​களின் உடல்​கள் பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. கொடுங்​கையூர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>நவீன் குமார்,&nbsp;அஸ்​மத் பாஷா</p></div>
​ஆவடி: போலி வங்கி காசோலை தயாரித்த 6 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in