சென்னையில் எல்ஐசி பாலிசி முதிர்வு தொகை மோசடி: 17 ஆண்டுக்குப் பிறகு 2 பேர் கைது

சென்னையில் எல்ஐசி பாலிசி முதிர்வு தொகை மோசடி: 17 ஆண்டுக்குப் பிறகு 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: எல்​ஐசி பாலிசி முதிர்​வுத் தொகைக்​கான ரூ.3 லட்​சத்து 22 ஆயிரத்து 500 காசோலையை போலி ஆவணங்​கள் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் வங்​கியி​லிருந்து எடுத்து மோசடி செய்த வழக்​கில், 17 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த 2009-ம் ஆண்டு அண்ணா சாலை​யில் உள்ள எல்​ஐசி அலு​வல​கத்​தில் மேலா​ள​ராகப் பணி​யாற்​றிய கண்​ணன் என்​பவர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார்.

அந்த புகாரில், எல்​ஐசி பாலிசி​தா​ர​ரான விஜயகு​மார் என்​பவரின் பாலிசி முதிர்வு தொகை​யான ரூ.3 லட்​சத்து 22 ஆயிரத்து 500-க்​கான காசோலை, அவரது சவு​கார்​பேட்டை முகவரிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

ஆனால், அந்​தக் காசோலையை மர்ம நபர்​கள் முறை​கே​டாகப் பெற்​றதுடன், விஜயகு​மார் பெயரில் போலி​யான ஆவணங்​களைத் தயாரித்​து, ஆள்​மாறாட்​டம் செய்து காசோலை தொகையை வங்​கி​யில் இருந்து எடுத்து மோசடி செய்து விட்​டனர்.

எனவே, அவர்​களை கண்​டறிந்து கைது செய்ய வேண்​டும். மேலும், மோசடி செய்​யப்​பட்ட பணத்தை மீட்​டுத்தர வேண்​டும்.

இவ்​வாறு புகார் மனு​வில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​தப் புகாரின் அடிப்​படை​யில் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வந்​தனர். ஆனால், மோசடிக்​காரர்​களை கண்​டறிய முடிய​வில்​லை.

இந்​நிலை​யில், இவர்​களை கண்​டு​பிடித்து கைது செய்ய காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார். அதன்​படி, தனிப்​படை அமைக்​கப்​பட்​டது. தனிப்​படை போலீ​ஸார் மீண்​டும் தேடு​தல் வேட்​டை​யில் இறங்​கினர்.

இந்​நிலை​யில், இந்த மோசடி வழக்​கில் 17 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த தஞ்​சாவூர் மாவட்​டம், கும்​பகோணத்​தைச் சேர்ந்த பிர​தாப்பை (41) கடந்த 31-ம் தேதி கைது செய்​தனர். அவருக்கு உதவி​யாக இருந்த சென்னை தரமணி, எம்​ஜிஆர் நகரைச் சேர்ந்த அர்​ஜுனனை (வயது 50) நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

சென்னையில் எல்ஐசி பாலிசி முதிர்வு தொகை மோசடி: 17 ஆண்டுக்குப் பிறகு 2 பேர் கைது
பரந்தூர் அருகே சிப்காட் தொழிற்பூங்கா - நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in