பரந்தூர் அருகே சிப்காட் தொழிற்பூங்கா - நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பரந்​தூர் அருகே மதுரமங்​கலத்​தில் சிப்​காட் தொழில் பூங்கா அமைப்​ப​தற்​காக 8.38 ஹெக்​டேர் நிலங்​களை கையகப்​படுத்​தும் பணி​களை தமிழக அரசு மேற்​கொண்டு வரு​கிறது. இதற்கு அப்​பகுதி விவ​சா​யிகள் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர், ஏகனாபுரத்​தில் சென்​னைக்​கான 2-வது விமான நிலை​யத்தை மத்​திய அரசுடன் இணைந்து அமைக்க முந்​தைய திமுக ஆட்​சி​யில் முடிவு செய்​யப்​பட்​டது. இதற்கு அந்​தப் பகுதி விவ​சா​யிகள் கடும் எதிர்ப்​பு​களைத் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் தவெக ஆட்​சிக்கு வந்த பிறகு பரந்​தூர் விமான நிலைய திட்​டம் கைவிடப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஆகஸ்ட் 31-ல் அறி​விப்பு வெளி​யிட்​டார். மேலும் சிப்​காட் நிறு​வனம் மூலம் காஞ்​சிபுரம் மதுரமங்​கலத்​தில் செமிகண்​டக்​டர் மற்​றும் மின்​னணு​வியல் உற்​பத்​திப் பூங்கா ரூ.175 கோடி​யில் அமைக்​கப்​படும் எனவும் அறி​வித்​தார்.

அறிவிக்​கை வெளியீடு

இந்​நிலை​யில் பரந்​தூர் அருகே மதுரமங்​கலத்​தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்​ப​தற்​காக 8.38 ஹெக்​டேர் நிலம் கையகப்​படுத்​து​வதற்​கான அறிவிக்​கையை நில நிர்​வாக ஆணை​யர் ராஜேஷ் லக்​கானி அரசிதழில் வெளி​யிட்​டுள்​ளார்.

அதில், `உரிமை​யாளர்​களுக்​கான இழப்​பீட்​டுத் தொகை சிப்​காட் நிதியி​லிருந்து வழங்​கப்படும். கையகப்​படுத்​தப்​பட​வுள்ள நிலங்​களின் வரைபடங்​கள் மற்​றும் தொடர்​புடைய ஆவணங்​கள், மாவட்ட வரு​வாய் சிறப்பு அலு​வலர் மற்​றும் சிறப்பு வட்​டாட்​சி​யர் அலு​வல​கங்​களில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அதை பொது​மக்​கள் வேலை​நாட்​களில் நேரில் பார்​வை​யிடலாம்' என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே இந்த நில எடுப்பு அறிவிக்​கைக்கு மதுரமங்​கலம் பகு​தி​களில் கடும் எதிர்ப்​பு​கள் கிளம்​பி​யுள்​ளன. பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் தொழிற்​பூங்கா அமைக்​கப்​படும் என கூறப்​பட்ட நிலை​யில் மதுரமங்​கலம் கிராமத்​தில் நிலத்தை கையகப்​படுத்தி புதிய தொழிற்​பூங்கா அமைப்​பது ஏற்​புடையதல்ல.

பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை ரத்து செய்த அரசு, எங்​கள் கிராமத்​தில் விவ​சாய நிலங்​களைக் கையகப்​படுத்​து​வது எப்​படி நியாய​மாகும்? ஏகனாபுரத்​துக்கு ஒரு நீதி, மதுரமங்​கலத்​துக்கு ஒரு நீதி​யா? என அப்​பகுதி மக்​கள் வேதனை​யுடன் கேள்வி எழுப்​பு​கின்​றனர்.

ஏற்​கெனவே விமான நிலைய எதிர்ப்​பால் பரபரப்​பாக இருந்த பரந்​தூர் சுற்​று​வட்​டாரப் பகு​தி​யில், சிப்​காட் திட்​டத்​துக்​கான புதிய நில எடுப்பு அறி​விப்பு மீண்​டும் பதற்​றத்​தை ஏற்​படுத்​தி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்க: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in