கரூர் அருகே ஸ்கூட்​டரில் சென்ற பெண்ணிடம் சங்​கிலி பறிக்க முயன்ற தவெக நிர்வாகி கைது

கரூர் அருகே ஸ்கூட்​டரில் சென்ற பெண்ணிடம் சங்​கிலி பறிக்க முயன்ற தவெக நிர்வாகி கைது
Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே ஸ்கூட்​டரில் சென்ற பெண்​ணிடம் சங்​கிலி பறிக்க முயன்​ற​தாக தவெக நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார்.

கரூர்- கோவை சாலை என்​எஸ்கே நகரைச் சேர்ந்​தவர் மகுடபதி மனைவி பிரி​யா. இவர், ஆக.16-ம் தேதி ஈரோடு மாவட்​டம் கொடு​முடி அருகே வருந்​தி​யா​பாளை​யத்​தில் உள்ள பெற்​றோரை பார்ப்​ப​தற்​காக கரூரில் இருந்து ஸ்கூட்​டரில் சென்று கொண்​டிருந்​தார்.

வேட்​டமங்​கலம் தனி​யார் பள்ளி அருகே சென்​ற​போது, அவரின் பின்​னால் பதிவு எண் இல்​லாத இரு சக்கர வாக​னத்​தில் வந்த அடை​யாளம் தெரி​யாத நபர், பிரி​யா​வின் சங்​கி​லியை பறிக்க முயன்​றார்.

இதில், சுதா​ரித்​துக் கொண்ட பிரி​யா, வாக​னத்தை இடதுபுற​மாக திருப்​பிய​தால் சங்​கிலி அறு​ப​டா​மல் தப்​பியது. இதையடுத்​து, அந்த நபர் அங்​கிருந்து தப்​பி​விட்​டார்.

இதுகுறித்து பிரியா அளித்த புகாரின்​பேரில், வேலாயுதம்பாளையம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர். அப்​போது,

தவெக புகழூர் நகரச் செய​லா​ள​ரான, மூளிமங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த நந்​தகு​மார் சங்​கி​லியை பறிக்க முயன்​றது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

கரூர் அருகே ஸ்கூட்​டரில் சென்ற பெண்ணிடம் சங்​கிலி பறிக்க முயன்ற தவெக நிர்வாகி கைது
பட்டாசு விபத்து தடுப்பு பரிந்துரைகளை தர வேண்டும்: ஆட்சியர், எஸ்பிக்கு ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in