ஶ்ரீவில்லிபுத்தூர்: விசாரணைக்கு அழைத்து வந்ததை கண்டித்து தீக்குளித்த திருநங்கை உயிரிழப்பு

உயிரிழந்த திருநங்கை முத்தரசி

உயிரிழந்த திருநங்கை முத்தரசி

Updated on
1 min read

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அருகே திருநங்கைகளை விசாரணைக்கு அழைத்து வந்ததை கண்டித்து தீக்குளித்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த திருநங்கை முத்தரசி (24) மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்த ஞாயிறு (ஜனவரி 25-ம் தேதி) திருநங்கைகள் இருவர் நடந்து சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து திட்டியதாக நகர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.

இதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் சென்ற போலீஸார் திருநங்கைகள் ஈஷா, ஷர்மி ஆகிய இருவரை ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, உடன் வந்த திருநங்கைகள் சிலர், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த முத்தரசி (24) என்ற திருநங்கை உடலில் பெட்ரோல் ஊற்றியபடி சாலையில் ஓடிச் சென்று தீ வைத்துக் கொண்டார்.

அவரை உடனடியாக மீட்ட போலீஸார், ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கிருந்து விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி திருநங்கை முத்தரசி உயிரிழந்துள்ளார்.

<div class="paragraphs"><p>உயிரிழந்த திருநங்கை முத்தரசி</p></div>
மறக்க வேண்டிய டெஸ்ட்: 61 பந்துகளில் முடிந்தே போன டெஸ்ட் - உயிர்ப்பலி அச்சுறுத்தல் பிட்ச்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in