திருப்பூர் அருகே லாரி - கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி நொறுங்கிய கார்.

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி நொறுங்கிய கார்.

Updated on
1 min read

திருப்பூர்: ​திருப்​பூர் அருகே காஸ் சிலிண்​டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி​ய​தில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். காயமடைந்த மேலும் 4 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்தணி​யைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி குமார் (38), அவரது சகோ​தரர் விஜய் (31), இவரது மனைவி தேன்​மொழி (21) மற்றும் உறவினர் இலக்​கியா, இவரது மகள் சுபஸ்ரீ, உறவின​ரான அய்​யப்​பன், இவரது மனைவி காவியா என மொத்​தம் 7 பேர் காரில் திருத்​தணி​யில் இருந்து ஊட்​டிக்கு சுற்​றுலா புறப்​பட்​டனர்.

காரை திருத்​தணி​யைச் சேர்ந்த ராஜ்கு​மார் (30) என்​பவர் ஓட்​டி​னார். இவர்​களது வாக​னம் சேலம்​- கோவை தேசிய நெடுஞ்​சாலை​யில், திருப்​பூர் மாவட்​டம் செங்​கப்​பள்​ளி​யில் உள்ள தனி​யார் பெட்​ரோல் பங்க் அருகே நேற்று அதி​காலை 5.30 மணி அளவில் சென்​ற​போது, சாலை​யோரம் நிறுத்​தப்​பட்​டிருந்த, காஸ் சிலிண்​டர் பாரம் ஏற்​றிய லாரி​யின் பின்​னால் மோதி​யது.

இந்த விபத்​தில் காரில் இருந்த குமார், விஜய், தேன்​மொழி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். காயமடைந்த இலக்​கி​யா, சுபஸ்ரீ, அய்​யப்​பன், காவி​யா, ராஜ்கு​மார் ஆகிய 5 பேரை​யும் அந்த வழி​யாகச் சென்​றவர்​கள் மீட்டு திருப்​பூரில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சேர்த்​தனர். விபத்து குறித்து ஊத்​துக்​குளி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து லாரியை ஓட்​டிச் சென்ற கோவையைச் சேர்ந்த அன்​பழகனை விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி நொறுங்கிய கார். </p></div>
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in