சிங்கப்பெருமாள் கோவில் | வீட்டு மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உதவி பொறியாளர், ஃபோர்மேன் கைது

சிங்கப்பெருமாள் கோவில் | வீட்டு மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உதவி பொறியாளர், ஃபோர்மேன் கைது
Updated on: 
1 min read

சிங்​கப்​பெரு​மாள் கோவில்: புதி​தாகக் கட்​டிய வீட்​டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்​சம் பெற்​ற​தாக உதவி மின் பொறி​யாளர், ஃபோர்​மேன் ஆகிய இரு​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், சிங்​கப்​பெரு​மாள் கோவில் அடுத்த பாரேரி பகு​தி​யைச் சேர்ந்​தவர் சம்​பத் (60). டிரைவ​ரான இவர் தனது வீட்​டுக்​குப் புதிய மின் இணைப்பு பெறு​வதற்​காக சிங்​கப்​பெரு​மாள் கோவில் மின்​வாரிய அலு​வல​கத்​தில் விண்​ணப்​பித்​திருந்​தார். விண்​ணப்​பித்து 3 மாதங்​களாகி​யும் மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை.

மின் இணைப்​புக்​காக உதவி மின் பொறி​யாளர் ஜெய​ராணியை சம்​பத் அணுகிய​போது அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து செங்​கல்​பட்டு லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸாரிடம் சம்​பத் புகார் அளித்​தார்.

இதையடுத்​து, போலீ​ஸாரின் அறி​வுறுத்​தலின்​படி ரசாயனப் பொடி தடவப்​பட்ட ரூ.20 ஆயிரம் பணத்​துடன் சம்​பத் மின்​வாரிய அலு​வல​கத்​துக்​குச் சென்​றார். அங்கு அவரிட​மிருந்து ஃபோர்​மேன் சரவணன் (50)பணத்​தைப் பெற்று உதவி மின் பொறி​யாளர் ஜெய​ராணி​யிடம் கொடுத்​துள்​ளார்.

அப்​போது அங்கு மறைந்​திருந்த செங்​கல்​பட்டு லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார், இரு​வரை​யும் பிடித்​தனர். தொடர்ந்து இரு​வரிட​மும் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

விசா​ரணைக்​குப் பிறகு, லஞ்​சம் பெற்​ற​தாக இரு​வர் மீதும் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், அவர்​களைக் கைது செய்து செங்​கல்​பட்டு குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்​. பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிங்கப்பெருமாள் கோவில் | வீட்டு மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உதவி பொறியாளர், ஃபோர்மேன் கைது
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இடைக்கால பாதிப்பு மண்டலமாக 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in