சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.12.49 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டி, பொருட்கள் சிக்கின

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலை​யத்​தில் ஆவணங்​கள் இன்றி கொண்டு வரப்​பட்ட, ரூ.12.49 லட்​சம் வெள்ளி பொருட்​கள் சிக்​கின.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தால், தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன. இதன் காரண​மாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் காவல் ஆய்​வாளர் மதுசூதன ரெட்டி தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, நாகர்​கோ​விலில் இருந்து சென்ட்​ரலுக்கு விரைவு ரயில் நேற்று வந்​தது. அதிலிருந்து இறங்கி வந்த பயணி​களை கண்​காணித்​த​போது, ஒரு​வர் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது.

அவரைப் பிடித்​து, அவரது பைகளை சோதித்​த​போது, அதில் வெள்ளிக கட்​டி மற்​றும் வெள்ளி பொருட்​கள் இருந்​தன. இவற்றின் மொத்த எடை 4 கிலோ 527 கிராம். இதன் மதிப்பு ரூ.12.49 லட்​சம் ஆகும். இந்த வெள்ளி பொருட்​களுக்கு உரிய ஆவணங்​கள் அவரிடம் இல்​லை.

இதையடுத்​து, அவரிடம் விசா​ரித்​த​போது, அவர் வேலூரைச் சேர்ந்த நாகப்​பன் மோகன் (39) என்​பதும், அரக்​கோணத்​தில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு வந்​ததும், அவரிடம் வெள்ளி பொருட்​களுக்​கான உரிய ஆவணங்​கள் இல்லை என்​பதும் தெரிய​வந்​தது.

தொடர்ந்து அவரை​யும், வெள்ளி பொருட்​களை​யும் வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். அவர்​கள் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடுவதில் தாமதம்: டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் அதிருப்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in