ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடுவதில் தாமதம்: டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் அதிருப்தி

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடுவதில் தாமதம்: டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் அதிருப்தி

Published on

சென்னை: நேர்​காணல் இல்​லாத பதவிகளை உள்​ளடக்​கிய ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வில் அசல் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு தகு​திபெற்​றோர் பட்​டியலை வெளி​யிட கால​தாமதம் ஏற்​பட்​டிருப்​ப​தால், டிஎன்பிஎஸ்சி மீது தேர்​வர்​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர்.

உதவி இன்​ஜினியர், வேளாண் விரி​வாக்க அலு​வலர், உதவி இயக்​குநர் (தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தா​ரம்), மீன்வள ஆய்​வாளர், இளநிலை அறி​வியல் அலு​வலர், உதவி பிரிவு அலு​வலர் (மொழிபெயர்ப்​பு), உதவி சுற்​றுலா அலு​வலர் (கிரேடு-2) உட்பட 51 வகை​யான பதவி​களில் 1,033 காலி​யிடங்​களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்​தப்​பட்​டு, தேர்வு முடிவு​கள் ஜனவரி 23-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன.

இதைத்​தொடர்ந்து பிப்​.26-ம் தேதி இணை​ய​வழி சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பட்​டியல் வெளி​யானது.

வழக்​க​மாக இணை​ய​வழி சான்​றிதழ் சரி​பார்ப்​புப் பட்​டியல் வெளி​யானதும் உரிய சான்​றிதழ்​களை சமர்ப்​பிக்​காதவர்​களுக்கு கால அவகாசம் அளிக்​கப்​பட்​டு, நேரடி அசல் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு தகு​தி பெற்​றவர்​களின் பட்​டியல் உடனடி​யாக வெளி​யிடப்​பட்​டு​விடும்.

ஆனால், நேர்​காணல் இல்​லாத பதவி​களுக்​காக நடத்​தப்​பட்ட ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் இணை​ய​வழி சான்​றிதழ் சரி​பார்ப்பு பட்​டியல் வெளி​யிட்டு 3 வாரங்​கள் ஆகி​யும் இன்​னும் அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு பட்​டியல் வெளி​யிடப்​பட​வில்​லை.

இணை​ய​வழி சான்​றிதழ் சரி​பார்ப்பு பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளவர்​களில் யாரேனும் உரிய சான்​றிதழ்​களை ஆன்​லைன் விண்​ணப்​பத்​தில் பதிவேற்​றம் செய்​யாமல் இருந்​திருந்​தா​லும், குறை​பா​டான சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​திருந்​தா​லும் அவர்​களுக்கு இன்​னும் கால அவகாசம் ஏதும் தரப்​பட​வில்​லை.

இதனால், மதிப்​பெண் தரவரிசை​யில் முன்​னிலை​யில் இருந்து பணி வாய்ப்பு பெறும் நிலை​யில் உள்ள தேர்​வர்​கள் டிஎன்பிஎஸ்சி மீது அதிருப்தி அடைந்​துள்​ளனர்.

நேரடி சான்​றிதழ் சரி​பார்ப்பு பட்​டியலுக்கு அனு​ம​திக்​கப்​பட்​ட​வர்​களின் வெளி​யிட்டு சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வை நடத்தி பணிக்கு தேர்​வானோர் பட்​டியலை டிஎன்பிஎஸ்சி விரை​வில் வெளி​யிட வேண்​டும் என்று அத்​தேர்​வர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடுவதில் தாமதம்: டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் அதிருப்தி
மாதாந்திர பாஸ் பெறும் பயணிகளுக்கு ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய வசதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in