​கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

​கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
Updated on
1 min read

கும்​பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் கும்பகோணம் அருகே உள்ள சத்​திரம் கருப்​பூரைச் சேர்ந்​தவர் ராஜா மனோகர்​(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விட உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.

இந்​நிலை​யில், கடந்த 13-ம் தேதி சிறப்பு வகுப்பு நடை​பெற்​ற​போது, 7 மாணவி​களுக்கு ஆசிரியர் ராஜா மனோகர் பாலியல் தொல்லை அளித்​துள்​ளார். இது தொடர்​பாக மாணவி ஒரு​வர் தனது தந்​தை​யிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே, விடுப்​பில் இருந்த பள்​ளித் தலைமை ஆசிரியர் கடந்த 23-ம் தேதி பள்​ளிக்கு வந்​த​போது, நடந்த சம்​பவம் குறித்து தெரிவிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பாக திரு​விடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில், மாவட்ட குழந்​தைகள் நல அலு​வலர் சத்யா புகார் அளித்​தார். அதன்​பேரில், ஆசிரியர் ராஜா மனோகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீ​ஸார், அவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர்​.

​கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in