மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 பிப்ரவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 பிப்ரவரி 2026
Updated on
2 min read

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புது பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபார ரீதியாக பயணம் செல்வீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.

தனுசு: குடும்பத்தினருடன் வாக்குவாதம் வேண்டாம். உடல்சோர்வு, அலைச்சல் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படவும். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நனவாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 பிப்ரவரி 2026
ஜோதிட நாள்காட்டி 27.02.2026 | மாசி 15 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in