டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக 72 வயது முதியவரிடம் ரூ.61 லட்சம் மோசடி: 3 பேர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக 72 வயது முதியவரிடம் ரூ.61 லட்சம் மோசடி: 3 பேர் கைது
Updated on: 
1 min read

சென்னை: டிஜிட்​டல் அரெஸ்ட் செய்​வ​தாக 72 வயது முதி​ய​வரிடம் ரூ.60.70 லட்​சம் மோசடி செய்த 3 பேரை இணை​ய​வழி குற்றப்பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை பாடி​யில் உள்ள அக்​சயா காலனி பகுதி​யைச் சேர்ந்தவர் வைரவன் (72), இவரை மர்ம நபர்​கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தாங்​கள் மும்பை போலீ​ஸார் பேசுவதாகக் கூறி புகார்​தா​ரரின் ஆதார் அட்​டையைப் பயன்படுத்தி சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனைகள் நடைபெற்றுள்​ள​தாகவும், அவரிடம் உள்ள பணம் சட்டப்பூர்வமானது என்​பதை நிரூபிக்க வேண்​டு​மானால், தாங்​கள் தெரி​விக்​கும் வங்​கிக் கணக்​கு​களுக்கு மொத்​தப் பணத்​தையும் உடனடி​யாக அனுப்ப வேண்​டும் என்​றும், அதனைச் சரிபார்த்த பின்​னர் புகார்​தா​ரரின் வங்​கிக் கணக்​குக்கே திருப்பி அனுப்பிவிடுவ​தாகவும் தெரி​வித்​துள்​ளனர்.

அவ்​வாறு பணத்தை அனுப்​பாவிட்​டால், வங்​கிக் கணக்​கு​களை முடக்கி, டிஜிட்​டல் அரெஸ்ட் செய்ய நேரிடும் என மிரட்​டியுள்​ளனர். இதில் பயந்​துபோன வைரவன், அவர்​கள் தெரி​வித்த வங்​கிக் கணக்​கு​களுக்கு மொத்​தம் ரூ.60.70 லட்​சத்தை அனுப்​பியுள்​ளார். ஆனால், பணத்​தைப் பெற்​றுக்​கொண்ட மோசடி நபர்​கள் அதனைத் திரும்ப வழங்​காமல் ஏமாற்​றியுள்​ளனர். இதைத் தொடர்ந்து, தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த வைரவன், தன்னை ஏமாற்​றிய​வர்​கள் மீது நட​வடிக்கை எடுக்​கக் கோரி ஆவடி காவல் ஆணை​யரக இணை​ய​வழி குற்​றப்​பி​ரிவு காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். புகாரின் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்து, இணை​ய​வழி குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். இவ்​வழக்​கில் கடந்த பிப்​ரவரி மாதம் 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மேலும், இவ்​வழக்​கில் தொடர்​புடைய​வர்​களைத் தொடர்ந்து தேடி வந்த நிலை​யில், புகார்​தா​ரர் இழந்த பணத்​தில் ரூ.5 லட்​சம் பரிவர்த்​தனை நடை​பெற்ற வங்​கிக் கணக்​கின் உரிமையாளரான விழுப்​புரத்​தைச் சேர்ந்த கந்​தவேல் கைது செய்​யப்​பட்​டார். மேலும், வங்​கிக் கணக்​கைத் திறந்து, சட்​ட​விரோத செயல்​களுக்கு பயன்​படுத்​தும் நபர்​களிடம் 15 சதவீத கமிஷனுக்கு விற்​பனை செய்ய கந்​தவேலுக்கு உடந்​தையாக இருந்த ஏஜென்​டுகளான சேலம் வேல​வன், பெரம்​பலூர் ஆறுமுகம் ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்​டனர். இதையடுத்து மூவரை​யும் பூந்​தமல்லி நீதி​மன்ற நடுவர் முன்பு ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக 72 வயது முதியவரிடம் ரூ.61 லட்சம் மோசடி: 3 பேர் கைது
காமராஜர், தேவர் வழியில் தமிழகம் மீண்டும் தேசியத்தின் பக்கம் நிற்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இளைஞர்களுக்கு அழைப்பு

X