காமராஜர், தேவர் வழியில் தமிழகம் மீண்டும் தேசியத்தின் பக்கம் நிற்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இளைஞர்களுக்கு அழைப்பு

காசி தமிழ்ச் சங்கமம் 5.0 தொடங்கியது
காமராஜர், தேவர் வழியில் தமிழகம் மீண்டும் தேசியத்தின் பக்கம் நிற்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இளைஞர்களுக்கு அழைப்பு
Updated on: 
3 min read

வாராணசி: காம​ராஜர், முத்​துராமலிங்​கத் தேவர் வழி​யில் தமிழகம் மீண்​டும் தேசி​யத்​தின் பக்​கம் நிற்க வேண்​டும் என குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் இளைஞர்​களுக்கு அழைப்பு விடுத்​தார்.

உத்​தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்​கமத்​தின் ஐந்​தாவது பதிப்பை (கேடிஎஸ் 5.0) குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் நேற்று தொடங்கி வைத்​தார். இவ்​விழா​வில் அவர், 10 வெளி​நாட்டு மொழிகள் உட்​பட 50 மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்ட திருக்​குறள் நூல்​களை வெளி​யிட்​டார். இவை சென்​னை​யிலுள்ள செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனத்​தால் வெளி​யிடப்​பட்​டவை.

மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் உயர்​கல்​வித் துறை, ஐஐடி மெட்​ராஸ், பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம், சென்​னை​யில் உள்ள செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம், உத்​தர பிரதேச அரசு மற்​றும் மத்​திய அரசின் பல்​வேறு அமைச்​சகங்​கள், துறைகள் ஆகிய​வற்​றின் ஒருங்​கிணைப்​பில் இந்​நிகழ்ச்சி நடை​பெறுகிறது.

உத்​தர பிரதேச முதலமைச்​சர் யோகி ஆதித்​யநாத், மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் பிரஹலாத் ஜோஷி, உ.பி. அமைச்​சர்​கள், ஐஐடி மெட்​ராஸ் இயக்​குநர் காமகோடி, பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத் துணைவேந்​தர் பேராசி​ரியர் அஜித் குமார் சதுர்​வேதி உள்​ளிட்​டோர் இந்​நிகழ்​வில் கலந்​து​ கொண்​டனர்.

இந்​நிகழ்​வில் குடியரசு துணைத் தலை​வர் ராதாகிருஷ்​ணன் பேசிய​தாவது:

தமிழ்​நாட்​டுக்கு காம​ராஜர் எப்​படியோ, அதேபோல உத்​தர பிரதேசத்​துக்கு முதல்​வர் யோகி திகழ்​கிறார். யோகி தலை​மையில், அயோத்​தி​யில் ராமர் கோயில் மட்​டுமல்ல, ராம ராஜ்ஜியமே மலர்ந்​திருக்​கிறது. எந்த நேரத்​திலும், இரவு வேளை​யில்​கூட, ஒரு பெண் எவ்​வித அச்​சமோ, அச்​சுறுத்​தலோ இன்றி தனியாக சுதந்​திர​மாக நடந்து செல்​லக்​கூடிய பாது​காப்​பான சூழல் உரு​வாகி​யுள்​ளது. அதுவே ராம ராஜ்ஜியத்​தின் அடை​யாளமாகத் திகழ்​கிறது.

இந்​தி​யாவின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் சுமார் 9% பங்​களிப்பை வழங்​கும் மாநிலமாக உபி உயர்ந்து நிற்​கிறது. நாட்​டின் மூன்​றாவது பெரிய பொருளாதா​ர​மாகவும் உத்​தர பிரதேசம் உரு​வெடுத்​துள்​ளது.

சுமார் 450 ஆண்​டுகளுக்கு முன்பே நாட்​டுக்​கோட்டை நகரத்​தார் இங்கு வந்து தங்கி, காசி​யின் பண்​பாட்டு வாழ்​வோடு தங்​களை இணைத்​துக்​கொண்ட வரலாற்றை யோகி குறிப்​பிட்​டார். அதேபோல, பல நூற்​றாண்​டுகளுக்கு முன்பே தமிழ்​நாட்​டி​லிருந்து வந்த நெசவாளர்​கள், இங்கு கைத்​தறி நெசவுத் தொழிலை வளர்த்து, புகழ்​பெற்ற பனாரஸ் பட்​டுத் துணிகளின் உற்​பத்​திப் பெருக்​கத்​துக்​கும் ஏற்​றுமதிக்​கும் பெரும் பங்​களிப்பு செய்​திருக்​கிறார்​கள்.

நாம் அனைவரும் ஒரே தர்​மத்​தைப் பின்​பற்​றுகின்​றவர்​கள். ஒரே தர்​மத்​தின் அடிப்​படை​யில் வாழ்​கின்​றவர்​கள். அதுவே நமது பாரதத்​தின் ஒற்​றுமைக்​கும், ஒரு​மைப்​பாட்​டுக்​கும் அடிப்​படை​யாகத் திகழ்​கிறது. இந்த அற்​புத​மான வரலாற்​றுத் தொடர்ச்​சி​யும், பாரதத்​தின் ஒற்​றுமை உணர்​வும் இன்​றும் என்​றும் நிலைத்​துத் தொடர வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான், பிரதமர் நரேந்​திர மோடி தொலைநோக்​குப் பார்​வை​யில் காசி தமிழ் சங்​கமம் உரு​வாக்​கப்​பட்​டது.

காசி தமிழ்ச் சங்​கமம் இன்று ஒரு மகத்​தான தேசிய இயக்​க​மாகவே வளர்ந்​திருக்​கிறது. இந்த ஐந்​தாவது காசி தமிழ்ச் சங்​கமத்​தின் தனிச்​சிறப்பு என்​னவென்று கேட்​டால், திருக்​குறளுக்​கும் திரு​வள்​ளுவருக்​கும் உரிய முதன்​மையையும் பெரு​மையையும் வழங்கி, அவற்றை தேசிய அளவில் முன்​னிறுத்​தி​யிருப்​ப​து​தான்.

உல​கின் மிகத் தொன்​மையான மொழிகளில் ஒன்று தமிழ் என்​பதை உல​கெங்​கும் ஓங்கி ஒலிக்​கச் செய்​தவர் நமது பிரதமர் என்​பதை நாம் ஒருபோதும் மறந்​து​விடக் கூடாது. நமது உயரிய விருந்​தோம்​பல் பண்​பையும், உல​களாவிய சகோ​தரத்​துவ உணர்​வையும் உல​கமே அறிந்​து​கொள்​ளும் வகை​யில், அவர் ஐக்​கிய நாடுகள் சபையில் ஆற்​றிய உரை ஒரு மிகச் சிறந்த முன்​னுதா​ரண​மாகத் திகழ்​கிறது.

கங்கை, காவிரி இணைப்பு

ஒரு மாதத்​திற்கு முன்​பாக, நமது மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சர் மற்​றும் அவர்​களது அதி​காரி​களு​டன் நான் ஒரு கலந்​துரையாடலை நடத்​தினேன். அந்​தக் கலந்​துரையாடலின் மூலம் ஒரு விஷயம் எனக்​குத் தெளிவானது. பிரதமர் நரேந்​திர மோடி அவர்​களின் சிந்​தனை​யிலும் இந்த இலக்கு இருந்து வரு​கிறது.

கரைபுரண்டு ஓடும் கங்​கை​யின் நீர் நமது காவி​ரியை வந்​தடையும் நாளை பாரத தேசம் நிச்​சயம் உரு​வாக்​கும். இந்த நாட்​டின் புண்​ணிய நதி​கள் அனைத்​தையும் நாம் இணைக்​கும் காலம் வரும். அந்த முயற்​சி​யின் முதற்​கட்​ட​மாக, கோதாவரி நதி​யின் நீரைக் காவி​ரிக்​குக் கொண்​டு வரும் திட்​டம் அமையும். கங்​கை, காவிரி நதி​யுடனான இந்​தச் சங்​கமத்​தைத்​தான் நான் இன்று காசி தமிழ்ச் சங்​கமமாகப் பார்க்​கிறேன். இந்த உயரிய கனவு விரைவில் நனவாகும். நாடெங்​கும் பசுமை செழிக்​கும் நிலை உரு​வாகும். இவ்​வாறு அவர் பேசினார்.

முன்​னதாக, குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், உத்​தர பிரதேச முதலமைச்​சர் யோகி ஆதித்​யநாத்​துடன் இணைந்து, வாராணசி​யில் உள்ள புனித காசி விஸ்வநாதர் திருக்​கோயில் மற்​றும் கால பைரவர் திருக்​கோயிலுக்​குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழுக்​கு மகத்​தான பணியாற்றும் மத்திய, உ.பி. அரசு

விழாவில் குடியரசு துணைத் தலை​வர் ராதாகிருஷ்​ணன் தமிழில் பேசிய​தாவது: இந்த ஆண்​டின் காசி தமிழ்ச் சங்​கமத்​தின் கருப்​பொருளாக, ‘திருக்​குறள் பயில்​வோம்’ என்பது தேர்ந்​தெடுக்கப்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளுவரின் திருக்​குறளில் பொதிந்துள்ள காலத்​தால் அழி​யாத அறநெறிகள், மனிதநேயச் சிந்​தனைகள் மற்​றும் வாழ்​வியல் நெறிகளை குறிப்​பாக மாணவர்​கள் மற்​றும் இளைஞர்​களிடம் கொண்டு சேர்ப்​பதே இதன் முக்​கிய நோக்​க​மாகும்.

இந்த ஆண்​டின் காசி தமிழ்ச் சங்கமத்தின் தனிச்சிறப்பே திருக்குறளையும், திருவள்ளுவரையும் தேசிய அளவில் மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான். திருக்குறளைப் படிப்போம், பயில்வோம், அதன் உயரிய அறநெறிகளை நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்போம் என்பதே இந்தப் பதிப்பின் மையச் செய்தியாகும். திருக்குறள் என்பது தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் மட்டுமே சொந்தமான நூல் அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உரிய ஓர் உயரிய வாழ்வியல் பொக்கிஷம்.

தமிழ்நாட்டில்கூட திருக்குறளை இவ்வளவு பரவலாகக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமா? என்றால், அனேகமாக இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. காசி தமிழ்ச் சங்கமத்தின் முதல் பதிப்பிலேயே திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாவது பதிப்பில் மேலும் 16 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இன்று, வெளிநாட்டு மொழிகள் உட்பட மொத்தம் 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.

தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும், திருவள்ளுவரின் உலகப் பொதுமறைக்கும் இதைவிடப் பெரிய பெருமையை வேறு என்ன வழங்க முடியும்? மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் இணைந்து தமிழுக்குச் செய்துள்ள இந்த மகத்தான பணியை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இதில் இரண்டு கர்மயோகிகளான பிரதமர் மோடியும், உபி முதல்வர் யோகியும் அளித்த பங்களிப்பு மகத்தானது. இவர்கள் இருவரும் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் ஆற்றியுள்ள பணி என்றும் போற்றத்தக்கது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

காமராஜர், தேவர் வழியில் தமிழகம் மீண்டும் தேசியத்தின் பக்கம் நிற்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இளைஞர்களுக்கு அழைப்பு
சரணடைந்த 18 மாவோயிஸ்ட்களுக்கு ரூ.75 லட்சம் உதவித்தொகை

X