80 வழக்கில் தொடர்புடைய ரவுடி தனசேகர் கைது

துப்பாக்கி, தோட்டாக்கள், பட்டாக்கத்திகள், சொகுசு கார் பறிமுதல்
கைது செய்யப்பட்ட தனசேகர், இளந்தமிழன், மனோ, சரத்குமார், கதிரேசன், புவனேஸ்வரன்.

கைது செய்யப்பட்ட தனசேகர், இளந்தமிழன், மனோ, சரத்குமார், கதிரேசன், புவனேஸ்வரன்.

Updated on
1 min read

சென்னை/ஆவடி: ​கொலை, கொலை முயற்சி உள்​ளிட்ட 80-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​களில் தொடர்​புடைய ரவுடி எண்​ணூர் தனசேகரை, அவரது 5 கூட்​டாளி​களு​டன் போலீ​ஸார் துப்​பாக்கி முனை​யில் கைது செய்​தனர்.

அவர்​களிடம் துப்​பாக்​கி, தோட்​டாக்​கள், பட்​டாக் கத்​தி​கள், சொகுசு கார் மற்​றும் ரூ.2.65 லட்​சம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சென்னை எண்​ணூர் பகு​தி​யைச் சேர்ந்த தனசேகரன் என்ற எண்​ணூர் தனசேகர்.

எண்​ணூர் காவல் நிலை​யத்​தின் ‘ஏ-பிளஸ்’ சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி. இவர் மீது 9 கொலை வழக்​கு​கள், 11 கொலை முயற்சி வழக்​கு​கள், 5 வழிப்​பறி வழக்​கு​கள், ஆள்​கடத்​தல், தனி​யார் நிறு​வனங்​களை மிரட்டி பணம் பறித்​தல், கொள்ளை உள்​ளிட்ட மொத்​தம் 80 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மேலும், எண்​ணூர் காவல் நிலை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட ஒரு வழக்​கில், பொன்​னேரி 4-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் அவருக்கு எதி​ராக பிடி​யாணை பிறப்​பித்​திருந்​தது.

இதையடுத்​து, ஆவடி காவல் ஆணை​யர் செந்​தில்​கு​மார் உத்​தர​வின் பேரில், இணை காவல் ஆணை​யர் சிவக்​கு​மார், துணை காவல் ஆணை​யர் மகேஸ்​வரி ஆகியோரின் மேற்​பார்​வை​யில், எண்​ணூர் உதவி காவல் ஆணை​யர் வெங்​கட்​குமார் தலை​மை​யில் தனிப்​படை அமைக்​கப்​பட்டு தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், தனசேகர் தனது கூட்​டாளி​களான மனோ என்​கிற மணவாளன், இளந்​தமிழன், சரத்​கு​மார், கதிரேசன், புவனேஷ்வரன் ஆகியோ​ருடன் சென்னை கிண்​டி​யில் உள்ள பிரபல நட்​சத்​திர ஓட்​டலில் பதுங்கி இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்று அதி​காலை தனிப்​படை போலீ​ஸார் ஓட்​டலை சுற்​றிவளைத்து அதிரடி சோதனை நடத்​தினர். அப்​போது, தனசேகர் உள்​ளிட்ட 6 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட சோதனை​யில், உரிமம் இல்​லாத ஒரு கைத்​துப்​பாக்​கி, 4 தோட்​டாக்​கள், 5 பட்​டாக்​கத்​தி​கள், 5 செல்​போன்​கள், ஒரு விலை உயர்ந்த சொகுசு கார், ரூ.2 லட்​சத்து 65 ஆயிரம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து எண்​ணூர் காவல் நிலை​யத்​தில் ஆயுதச் சட்​டம் மற்​றும் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டு, கைது செய்​யப்​பட்ட 6 பேரிட​மும் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

பின்​னர் அவர்​கள் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட்டு, நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிறை​யில் அடைக்​கப் பட்​டனர். கைது செய்​யப்​பட்ட ரவுடி தனசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​களுக்கு வேறு குற்​றச் செயல்​களில் தொடர்பு உள்​ள​தா? அவர்​கள் பதுக்கி வைத்​துள்ள ஆயுதங்​கள் மற்​றும் அவர்​களுக்கு பின்​னணி​யில் செயல்​பட்​ட​வர்​கள் யார்? என்​பது குறித்​தும் போலீ​ஸார் தொடர்ந்து வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த சம்​பவம் வடசென்னை மற்​றும்​ புறநகர்​ பகு​தி​களில்​ பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட தனசேகர், இளந்தமிழன், மனோ, சரத்குமார், கதிரேசன், புவனேஸ்வரன்.</p></div>
இலவச பயணத் திட்டப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் ‘விடியல்’ வார்த்தை நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in