ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது
Updated on
1 min read

செங்குன்றம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டு, புழல் மத்​திய சிறை​யில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி சிறை வாயி​லில் மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார்.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் தமிழக தலை​வ​ராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு அவரது வீட்​டின் அருகே கொலை செய்​யப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக, புதூர் அப்பு உள்​ளிட்ட பலர் கைது செய்​யப்​பட்டு புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் கைதாகி ஓராண்​டுக்கு மேலாக சிறை​வாசம் அனுப​வித்து வந்​தவர்​களுக்கு படிப்​படி​யாக நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது.

இதற்​கிடையே கடந்த 2-ம் தேதி புழல் மத்​திய சிறை​யில் ஜாமீன் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட தகராறில், விசா​ரணை பிரி​வில் இருந்த பொன்னை பாலு, மணி​கண்​டன் ஆகியோ​ருக்​கும் புதூர் அப்​புக்​கும் இடையே ஏற்​பட்ட மோதலில் இருதரப்​பினரும் தாக்கி கொண்​டனர். இதை தடுக்க சென்ற உதவி ஜெயிலர் திரு​நாவுக்​கரசு கீழே தள்​ளப்​பட்டு தாக்​கப்​பட்​டார்.

இதுதொடர்​பாக, ஜெயிலர் முரு​கேசன் அளித்த புகாரின் பேரில் புழல் போலீ​ஸார் கொலை முயற்​சி, அரசு அதி​காரியை பணி செய்ய விடா​மல் தடுத்​தல் உள்​ளிட்ட 4 சட்​டப் பிரிவு​களில் வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர்.

சிறைக்​குள் மோதல்: இந்​நிலை​யில், சமீபத்​தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் புதூர் அப்​புவுக்கு நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. ஆகவே, நேற்​று​முன்​தினம் மாலை புழல் மத்​திய சிறை​யில் இருந்து புதூர் அப்பு விடுவிக்​கப்​பட்​டு, சிறை​யில் இருந்து வெளியே வந்​தார்.

அப்​போது, சிறை நுழை​வாயி​லில், சிறைக்​குள் நடை​பெற்ற மோதல் சம்பவ தொடர்​பாக பதிவு செய்​யட்ட வழக்​கில் ரவுடி புதூர் அப்​புவை புழல் போலீ​ஸார் கைது செய்​தனர். பிறகு, அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி மீண்​டும்​ புழல்​ மத்​தி​ய சிறை​யில்​ அடைத்​தனர்​.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது
திருப்போரூர் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மறியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in